செவ்வாய், 2 மே, 2017

ராஜீவ் கொலை வழக்கு: 4 வாரத்தில் தாக்கல்...உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ. 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கு: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை 17 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விசாரணை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கை விரைந்து முடிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது நீதி பதிகள் ஏன் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில் பதில் அளிக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், 4 வாரங்களில் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்   மாலைமலர்

கருத்துகள் இல்லை: