வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

எடுபிடி எம் எல் ஏக்களின் விலை : 5 கோடி (ரொக்கமாக அல்ல தங்ககட்டி) இன்னோவா கார் +4 வருஷங்களும் கமிசன் உறுதி !

எம்.எல்.ஏ.,க்கள் எல்லோருக்கும் 5 கோடி ரூபாய் பணம். அத்துடன் ஹையர் எண்ட் இன்னோவா கார் கொடுப்பதாக ஒப்புதல் அளித்திருந்தார்கள். பணம் வேண்டாம் என்பவர்கள் அந்த மதிப்புக்கு தங்கக்கட்டி வாங்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். எப்படி கேட்டார்களோ அப்படி அவரவர்களுக்கு போய்ச் சேர்ந்துவிட்டது
மின்னம்பலம் :
“முதல்வராக பதவியேற்றதும் இரவோடு இரவாக பழனிச்சாமி பரப்பன அக்ரஹாரா போவார். அங்கே சிறைக்குள் சென்று சின்னம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டுதான் கோட்டைக்குப் போவார் என்ற தகவல் முதலில் சொல்லப்பட்டது. ஆனால் நேற்று அவர் கிளம்பவில்லை. இன்று காலையில் பரப்பன அக்ரஹாரா போகிறார் என்று சொல்லப்பட்டதால், ஜெயில் இருக்கும் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏனோ பழனிச்சாமி போகவில்லை. ’சசிகலா உங்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தாலுமே அவர் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு கைதி. முதல்வராக பொறுப்பேற்றதும் நீங்கள் சிறைக்குச் சென்று அவரைச் சந்திப்பது நல்லது இல்லை. அது பல்வேறு விமர்சனங்களை கிளப்பும். அத்துடன் திமுக சட்டமன்றத்தில் இதுதொடர்பாக உங்களிடம் கேள்விகளை எழுப்பலாம். பிரச்னைகளை கிளப்பலாம். அதனால் சட்டமன்றத்தில் உங்கள் பலத்தை நிரூபித்து நிலையான ஆட்சியமைக்கும் வரை நீங்கள் சிறைக்குச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது’ என்று, சட்ட நிபுணர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.
அந்தத் தகவலை உடனடியாக முதல்வர் பழனிச்சாமி திவாகரனிடமும், தினகரனிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் அதற்கு, ‘அது இப்போது பிரச்னை இல்லை. முதலில் நம் பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் முதல்வர் பழனிச்சாமியின் பரப்பன அக்ரஹாரா பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதற்கிடையில், இன்று காலை திவாகரனும் தம்பிதுரையும் கூவத்தூரில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அங்கே தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.,க்களில் யாரும் மனம் மாறிவிடக் கூடாது. யாரையும் மாற விட்டுவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் பிற்பகலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூருக்கு கிளம்பிப் போனார். சரியாக மாலை 4 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டுக்கு போய்ச் சேர்ந்தார். அவர் உள்ளே நுழைந்ததும் எம்.எல்.ஏ.,க்கள் உற்சாக குரல் எழுப்பியிருக்கிறார்கள். ஒவ்வொரு எம்.எல்.ஏ.,விடமும் சென்ற பழனிச்சாமி அவர்களை கையெடுத்துக் கும்பிட்டு, ‘நாளை சட்டமன்றத்தில் எனக்கு ஆதரவாக ஓட்டளியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அவர்களும் கைகொடுத்து வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு, அவர்களிடம் பழனிச்சாமி பேசியிருக்கிறார். ‘நமக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு. இன்னும் மிச்சமிருக்கும் நான்கு ஆண்டுகளும் அம்மா ஆட்சி நடக்குறது உங்க கையில்தான் இருக்கு. நாம எல்லோரும் நினைப்பதுபோல இந்த ஆட்சி நடக்கும். உங்களுக்கு என்ன தேவையோ அது எல்லாவற்றையும் செய்து கொடுக்க நாங்க தயாராக இருக்கோம். நீங்க யாரும் எதுக்காகவும் வருத்தப்பட வேண்டாம்’ என்று பேசியிருக்கிறார். அத்துடன், அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படும் சில எம்.எல்.ஏ.,க்களை தனியாகவும் அழைத்து பழனிச்சாமி பேசியிருக்கிறார். எப்படியோ, எல்லோரையும் ஒருவழியாக சமாதானம் செய்துவிட்டதாக நம்பிக்கையில் இருக்கிறார்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“ஒரு வழியாக என்றால்...?’’ என்ற கேள்வி ஃபேஸ்புக்கில் இருந்து வந்தது.
பதிலை அடுத்த மெசேஜ் ஆக, டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“கொஞ்சம் பணமும் ஒரு காரும் என, நான் சில நாட்களுக்குமுன்பு டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தேன். எம்.எல்.ஏ.,க்கள் எல்லோருக்கும் 5 கோடி ரூபாய் பணம். அத்துடன் ஹையர் எண்ட் இன்னோவா கார் கொடுப்பதாக ஒப்புதல் அளித்திருந்தார்கள். பணம் வேண்டாம் என்பவர்கள் அந்த மதிப்புக்கு தங்கக்கட்டி வாங்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். எப்படி கேட்டார்களோ அப்படி அவரவர்களுக்கு போய்ச் சேர்ந்துவிட்டது. இன்னோவா காருக்கு புக்கிங் செய்துவிட்டார்கள். இன்னும் அது டெலிவரி கொடுக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி. அதனால் எம்.எல்.ஏ.,க்கள் எல்லோருமே செம ஹேப்பி. இதில் திருப்போரூர் கோதண்டராமன், தேனி தங்க.தமிழ்ச்செல்வன் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக சொல்லப்பட்டு இருந்ததாம். அவர்கள்தான் லிஸ்ட்டில் தங்கள் பெயர் இல்லை என்ற அதிருப்தியில் இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் திவாகரன் நேரடியாகவே பேசியிருக்கிறார். ‘இப்போ இருக்கும் சூழ்நிலையில் உங்களுக்கு மட்டும் அமைச்சரவையில் இடம் கொடுத்தால், மற்றவர்களும் கேட்க ஆரம்பிப்பாங்க. அப்புறம் சிக்கல் இன்னும் அதிகமாகும். நம்பிக்கை வாக்கெடுப்பு முடியட்டும். நம்ம பலத்தை நிரூபிச்சபிறகு, உங்களுக்கு என்ன செய்யணும் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். உங்க நம்பிக்கை எப்பவும் வீண் போகாது. நான் இருக்கேன். என்னை நம்புங்க..’ என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். திவாகரன் சமாதானப்படுத்தியதால் அவர்களும் சமாதானமாகிவிட்டார்கள். ஆக, இனி சிக்கல் எதுவும் இருக்காது என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் மன்னார்குடி குடும்பத்தினர்” என்று முடிந்தது அந்த பதில் மேசேஜ்.

கருத்துகள் இல்லை: