வியாழன், 16 பிப்ரவரி, 2017

தொண்டர்கள் நம் பக்கம் உள்ளார்கள்! துரோகிகள் ஆட்சி தொடராது ! பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ..

தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி
பதவியேற்றுள்ள நிலையில், ஓ.பி. எஸ்.க்கு ஆதரவாக அதிமுக பிரமுகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் விபரம் வருமாறு,
மாஃபா பாண்டியராஜன் (அதிமுக)
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு சட்டப்படி செல்லாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும். தொண்டர்கள் அனைவரும் ஓ.பி.எஸ்., பின்னால் நிற்பார்கள். சசிகலாவுக்கு எதிராக மைத்ரேயன் மனு அளித்துள்ளார். எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும். தொண்டர்கள் ஓ.பி.எஸ்., பக்கம் உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

செம்மலை(எம்.எல்.ஏ)


தொகுதி மக்களின் விருப்பத்திற்கு இணங்க ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவிக்கிறேன். குடும்ப ஆட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். அவர்கள் தொகுதிக்கு வர வேண்டும். தொண்டர்கள் நம் பக்கம் உள்ளார்கள். மக்களின் மனநிலை அறிந்து நான் இடம் மாறினேன். நீதிகேட்டு தமிழக மக்களை சந்திக்க நீதிப்பயணத்தை பன்னீர் செல்வம் துவங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
பொன்னையன்


குடும்ப ஆட்சியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். தனியார் விடுதியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மனரீதியாக பயமுறுத்தப்பட்டுள்ளனர் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பார்கள். மேலும் ஜெயலலிதா வழங்கிய பதவியில் நாங்கள் சட்டப்படி உள்ளோம். 10 ஆண்டுகளாக கட்சியில் இல்லாதவரை கட்சியில் சேர்க்க சசிகலாவுக்கு அதிகாரமில்லை. தினகரன் நியமனம் சட்டப்படி செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.
கே.பி.முனுசாமி

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் கையில் ஆட்சி சென்றிருப்பதால் அவரது ஆன்மா துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இவர்களின் கையில் ஆட்சியும் கட்சியும் சேர்ந்துள்ளதால் ஜெயலலிதாவின் ஆன்மா இதனை ஏற்காது என்று அவர் கூறினார்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: