சனி, 18 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் ஆவேசம்! கடும் அமளி! ! ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் தனபால் மறுப்பு

தமிழகத்தின் அரசியல் நிலவரம் நொடிக்கு நொடி பரபரப்பான சூழலை கொண்டுள்ளது. முதல்வராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார். எனவே இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி இன்று சிறப்பு பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் தனபால் மறுத்து விட்டார்.

சட்டப்பேரவையில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக அதிமுக, திமுகவை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்தில் கூடியுள்ளனர். இந்நிலையில் பழனிச்சாமி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் என்ன கொலை குற்றவாளிகளாக அவர்களை கைதிகள் போல் போலீசார் கண்காணிப்பில் அழைத்து வருகின்றனர் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே வாக்குவாதத்தால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. laivde

கருத்துகள் இல்லை: