

பின்னர் மூன்று மணிக்கு துவங்கி சபையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கட்டயாப்படுத்தி வெளியேற்றி, அ.தி.மு.க.,எம்.எல்.ஏக்கள் மட்டுமே சபையில் இருந்த நிலையில் எடப்பாடி ஒரே நாளில் இரண்டாவது முறை நம்பிக்கை
வாக்கெடுப்பு கோரினார். இது சபை மரபை மீறிய செயல். அதில் 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தாக எடப்பாடி கொண்டு வந்த நம்பிக்கை எடுக்கக்கோரிய தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர் தனபால். இது குறித்து தமிழக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறுகையில், சபைவிதிப்படி ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டால், அதே தீர்மானம் மீண்டும் சபையில் கொண்டு வர முடியாது.
திரும்ப கொண்டு வர வேண்டும் என்றால், முதலில் முன் மொழிந்த தீர்மானம் தோற்றுவிட்டது என்று அர்த்தம். அப்படி தோற்றுப் போன தீர்மானத்தையும் உடனடியாக கொண்டு வர முடியாது. அடுத்த 6 மாதம் கழித்துத்தான் அவையில் அதே தீர்மானத்தை முன்மொழிய முடியும். ஒருமணி நேரத்தில் திரும்ப கொண்டு வந்தால் அது விதிமுறைப்படி செல்லாது. எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது முறையாக தீர்மானத்தை முன்மொழிந்துள்ளதால் அவை நடவடிக்கை செல்லாது என்று ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக