
இந்நிலையில், இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ‘ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் நிறுவப்படும். இதுவரை நாங்கள் எடுத்து வந்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக இங்கு நேரடியாக வந்திருந்த கட்சியினர், மகளிர், இளைஞர்கள் ஆகிய அனைவருக்கும் பாதம் தொட்டு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் செல்வதை எதிர்க்கும்வகையில்தான் நாங்கள் இதுவரை போராடி வந்தோம். அநீதிக்கு எதிரான இந்த தர்மயுத்தம் உங்கள் அனைவரின் ஆதரவுடன் தொடரும்.’ இவ்வாறு அவர் கூறினார்.மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக