சனி, 18 பிப்ரவரி, 2017

துணை ராணுவம் விரைந்தது எடப்பாடி பழனிசாமி வாக்கெடுப்பில் தோற்றால் .. குடியரசு தலைவர் ஆட்சி ?

மக்கள் கருத்தை கேட்ட பின்பே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் . பன்னீர்செல்வம் கோரிக்கை . சபாநாயகர் நிராகரித்தார் .  இன்றே வாக்கெடுப்பு நடத்த பன்னேர்செல்வம் எதிர்ப்பு .சட்ட சபை வளாக பாதுகாப்புக்கு துணை இராணுவம் விரைந்தது
இன்று சட்டபேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகியுள்ளது. முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது பெம்பான்மையை நிரூபிக்க , சட்டசபையில் இன்னும் சிறிது நேரத்தில் நம்பிக்கை வாக்குக்கு எடப்பாடி கோருவார். அவர் தனக்கு ஆதரவாக 124 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 122 குறைந்துள்ளது. மேலும், எதிர்க்கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸும் எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். அதனால் இந்த எண்ணிக்கை மேலும் குறையவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை, எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனால், திமுகவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். திமுக இந்த வாய்ப்பை நிராகரிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் நிலை உருவாகும். இதேபோல கடந்த 1991ல் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. லைவ்டே

கருத்துகள் இல்லை: