
அதிமுகவின்
பொதுச் செயலாளர் சசிகலா சிறைக்குச் சென்றநிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
ஒற்றுமையுடன் இருப்பதாகவும், கவர்னர் அழைத்தால்தான் விடுதியை விட்டு
வெளியேறுவோம் என்றும் அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட
நிலையில், சசிகலாவை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் சொத்துக் குவிப்பு
வழக்கில் தீர்ப்பளித்து பெங்களுரு சிறையில் அடைத்தது. இந்நிலையில்,
எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை குழுத் தலைவராக எம்.எல்.ஏ.க்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்தார்.
இந்த பரபரப்புக்கிடையே எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூவத்தூர்
சொகுசு ரிசார்ட்டுக்கு அதிமுக அவைத்தலைவர் செங்கோட்டையன் நேற்று சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் , எம்.எல்.ஏ.க்கள் அனைவரும்
ஒன்றுமையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும், ஆட்சி அமைக்க ஆளுநரிடம்
உரிமை கோரியுள்ளோம். ஆளுநர் விரைவில் அழைப்பார் என்ற நம்பிக்கை
இருக்கிறது. எனவே கவர்னர் அழைத்தால்தான் இங்கிருந்து வெளியேறுவோம் . அதுவரை
வெளியேற மாட்டோம் என்றும் தெரிவித்தார். மின்னனம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக