வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

சசியும் ஜெயாவும் மட்டுமல்ல ! நல்லாட்சி வேண்டும் ஆனால் ஓட்டுக்கு ஐயாயிரம் ரூபாயும் வேண்டும் ! நீங்கள் உத்தமர்தானா?

Stanley Rajan : சசிகலா அம்மையாரே நீங்கள் இவ்வளவு பணம் சேர்த்தது யாருக்காக? நிச்சயம் தேர்தலுக்க்காக.
வோட்டுக்கு 5 ஆயிரம் வரை கொடுக்க நீங்கள் மன்னார்குடியிலிருந்தா கொண்டுவரமுடியும்? இங்குதான் சுரண்ட முடியும்?  அப்படி மக்களுக்காக சுரண்டி, தேர்தலில் மக்களுக்கே கொடுத்தீர்கள்
மக்களுக்கு 5 ஆயிரம் என்றால், அதன் மேலுள்ள நிர்வாகி எவ்வளவு சுரண்டியிருப்பான், அதற்கு மேல் உள்ளவன் எவ்வளவு அமுக்கியிருப்பான்?
வோட்டுக்கு 15 ஆயிரம் கணக்காகின்றது
அதன் பின் தேர்தல் செலவு, பெட்ரோல் செலவு, பிரியாணி செலவு, விந்தியா செலவு, நமீதா செலவு என எவ்வளவு?
அது போக வைகோ, சீமான், தா.பாண்டியன் என படியளக்க எவ்வளவு?
ஆக நீங்கள் தமிழக மக்களுக்காக ஊழல் செய்து, வோட்டுக்கு 5 ஆயிரம் கொடுக்க ஊழல் செய்து சிக்கியிருக்கின்றீர்கள்
அது அல்லாது உங்களுக்கு எதற்கு இவ்வளவு பணம்??
அதிமுக எனும் மக்கள் இயக்கத்தை ஒரு பன்னாட்டு கம்பெனியாக் நிர்வகிக்கும் பொழுது அதற்கான வருமானத்தை தமிழகத்தில்தானே சுரண்ட முடியும்
அதனைத்தான் நீங்கள் செய்தீர்கள்?
ஆனால் இந்த நன்றிகெட்ட மக்களை கண்டீர்களா? 3 சட்டமன்ற தேர்தல், 7 பாராளுமன்ற தேர்தல், 5 உள்ளாட்சி தேர்தலில் நன்றாக உங்களிடம் வாங்கி செலவழித்துவிட்டு இன்று நீங்கள் சிறைசென்றதற்கு மகிழ்கின்றார்களாம்

இவர்கள் பன்னீர்செல்வத்தை விட மோசமானவர்கள் சசிகலா, இம்மக்களுக்காகவா அரசியலுக்கு வருவீர்கள் சீ சீ
இந்த நன்றிகெட்ட மக்கள் நீங்கள் கொடுக்கும் வரை வாங்கிகொண்டு இன்று உங்களை கொள்ளைகாரி ஊழல்காரி என தூற்றுகின்றார்கள்
இந்த மக்கள் எல்லாம் இப்படித்தான் சின்னம்மா, இவர்களை எல்லாம் ரிசார்ட்டில் போட்டு சாத்தவேண்டும்.
இம்மக்களுக்கு எவ்வளவு பேராசை பார்த்தீர்களா?
நல்ல அரசும் வேண்டும், அது கைநிறைய காசு தந்தும் வோட்டு வாங்க வேண்டும், ஆனால் ஊழலும் நடக்க கூடாதாம்..
பில்கேட்ஸ் முதல் அரபு சுல்தான்கள் வரை இப்படி தமிழகத்தில் ஆளமுடியுமா?
காசு கொடுத்தால் ஜெயாவினை வைப்பார்கள், ஆனால் அவர் ஊழல் செய்தால் கொந்தளிப்பார்கள். கூட இருக்கும் நீங்கள் அந்த பணத்திற்கு பொறுப்பு என்றால் உங்களையும் சாடுவார்கள்
ஆனால் தேர்தலுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்கமாட்டார்கள்.
பணம் செலவழிக்காமல் நின்ற காமராஜர், நல்லகண்ணுவினை எல்ல்லாம் டெப்பாசிட் கிடைக்காமல் விரட்டுவார்கள்,
இந்த தமிழ் கூட்டம் வேறுமாதிரியானது, அவர்கள் கனவு வேறு , யதார்த்தம் வேறு
நல்லாட்சி வேண்டும் என்பார்கள், ஆனால் காசுகொடுத்தால் வாக்களிப்பார்கள்.
காசு கொடுத்தவன் ஊழல் செய்யமாட்டானா? ஆனால் செய்தால் சுரண்டல் ஊழல் என ஒப்பாரி வைப்பார்கள்.
மகா கொடுமையும், பேராசையும் நிறைந்த மக்கள் இந்த தமிழகத்தார்.
கவனியுங்கள் சசிகலா, உங்களை அருகே அமர்த்தி இத்தனை ஆயிரம் கோடிகளை சுருட்ட அனுமதித்து, அதன் மூலம் தேர்தலில் வென்ற ஜெயலலிதா உத்தமி
அவர் கண்ணசைவில் அவருக்கு பினாமியிருந்த நீங்கள் குற்றவாளி
எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா தமிழக நிலை?
இவர்கள் அப்படித்தான்
இனியாவது உங்களுக்கு ஞானம் பிறக்கட்டும், இந்த கேடுகெட்ட மக்களுக்காகவா இனி அரசியலுக்கு வருவீர்கள்?
ஓடிவிடுங்கள், இம்மக்கள் அப்படித்தான்.

கருத்துகள் இல்லை: