இத்தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்து அதை சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2010-ம் ஆண்டு தண் டனையை உறுதி செய்தது.இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி, மூவரும் சுப்ரீம் கோர்ட்டில்ல் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்போது, “கட்சித் தலைவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதும் மனமுடைந்த தொண்டர்கள் விரக்தி காரணமாக வன்முறையில் ஈடுபட்டனர்.மாணவிகளை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பஸ்ஸுக்கு தீவைக்கவில்லை. இச்சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை அல்ல. கூட்டத்தினருடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்ட நேரத்தில் நடந்த தற்செயலான சம்பவமாகும்.குற்றம் சாட்டப்பட்டவர்களின் நோக்கம் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில், அரசு சொத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்பது மட்டுமே. வேளாண் பல்கலைக்கழகம் அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், அந்த பஸ்ஸுக்கு தீவைப்பதன் மூலம் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. எனவே, தண்டனையை குறைக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
வழக்கின் அடுத்த விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகி யோரின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தும் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, “கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்து எரிக்கப்படவில்லை, உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்ட தவறு என்பதால் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக