திங்கள், 7 மார்ச், 2016

அமெரிக்க தேர்தல் : ட்ரம்ப் ஹிலாரி இருவருக்குமே பின்னடைவு...தலா இரு மாநிலங்களில் திடீர் தோல்வி...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும், பிரைமரி தேர்தலில், திடீர் திருப்பமாக, குடியரசு கட்சியில், டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சியில், ஹிலாரி கிளிண்டனும், தலா இரு மாகாணங்களில் தோல்வியை தழுவினர்.அமெரிக்காவில், வரும் நவம்பர், 8ல், அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில், போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்வதற்காக, குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் சார்பில், பிரைமரி மற்றும் காகஸ் தேர்தல்கள், மாகாணங்கள் வாரியாக நடக்கின்றன.கடந்த, 1ம் தேதி, 12 மாகாணங்களில் நடந்த தேர்தலில், டிரம்ப்பும், ஹிலாரியும் பெருமளவு வெற்றி பெற்றனர். இந்நிலையில், 5ம் தேதி, ஐந்து மாகாணங்களில் பிரைமரி தேர்தல் நடந்தன.


இதில், எதிர்பாராத திருப்பமாக, கன்சாஸ், மெய்னே காகசஸ் ஆகியவற்றில் டிரம்ப் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிடும் டெட் குரூஸ் வென்றார்.லுாசியானா, கென்டகி மாகாணங்களில் டிரம்ப்புக்கு வெற்றி கிடைத்தது. ஜனநாயக கட்சியிலும், நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், ஹிலாரி கிளிண்டன் கன்சாஸ், நெப் ரஸ்கா ஆகிய மாகாணங்களில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் வென்றார்.
லுாசியானாவில், ஹிலாரி வெற்றி பெற்றார். தற்போதைய நிலவரப்படி, டிரம்ப் மற்றும் ஹிலாரி தலா இரு மாகாணங்களில் தோல்வியை தழுவினாலும், இரு கட்சிகளிலும் அவர்களே தொடர்ந்து முன்னணியில் உள்ளன dinamalar.com

கருத்துகள் இல்லை: