திங்கள், 14 மார்ச், 2016

அரசியல் ஆக்காதீர்கள் ஸ்ரீஸ்ரீ ரவியின் வேண்டுகோள்....அரசியல்வாதிகளின் முழுநேர அல்லக்கை...

இந்தியாவின் புகழையும், மதிப்பையும் உயர்த்தும் நிகழ்ச்சிகளை அரசியலாக்கக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு 'வாழும் கலை' நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர், ’’யமுனை ஆற்றின் கரையில் நடத்தப்பட்டு வரும் உலக கலாச்சார திருவிழா குறித்து ஊடகங்களில் மிகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது என்பது சாதாரண காரியமல்ல. இது மிகப்பெரிய ஒன்று. அரசியல் கட்சிகள் இதை அரசியலாக்கக்கூடாது. சதா மாறி மாறி எல்லா அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலையும் கவனித்து  காசு பார்க்கும் இந்த சாத்தான் வேதம் ஓதுவது வேடிக்கை...இவரின் தில்லு முல்லு பிடிபட்டதும் ஐயோ அதை பகிரங்க படுத்தவேண்டாம் என்று  வேண்டுகோள் வேற... 
அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து இதை வரவேற்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவின் மதிப்பை சர்வதேச அரங்கில் உயர்த்த முடியும். அடுத்த உலக கலாச்சார திருவிழாவை நடத்த ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ மற்றும் இதர சில நாடுகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன’’என்று தெரிவித்துள்ளார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: