கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் 2014 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டது. எனவே இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தே.மு.தி.க., - தி.மு.க., இடையே கூட்டணி ஏற்பட்டால் பலமான கூட்டணி அமைப்பது, தே.மு.தி.க., - தி.மு.க., கூட்டணி ஏற்படாவிட்டால் சிறிய கட்சிகளை இணைத்து அதிக தொகுதிகளில் போட்டியிடுவது என, அ.தி.மு.க., முடிவு செய்தது. அதனால் தே.மு.தி.க., முடிவுக்காக அ.தி.மு.க., காத்திருந்தது.
தே.மு.தி.க., 'தனித்து போட்டி' என அறிவித்ததும் அ.தி.மு.க., கூட்டணி பேச்சை துவக்கி விட்டது. அ.தி.மு.க., கூட்டணியில் ஏற்கனவே உள்ள சிறிய கட்சிகளுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று மாலை 3:00 மணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர், இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தமிழ் மாநில பொதுச் செயலர் கதிரவன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷேக்தாவூத், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் தங்கள் கட்சிநிர்வாகிகளுடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசினர்.
மகிழ்ச்சி:
முதல்வர், 'தொகுதி
பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்படும்; அவர்களுடன் பேச உங்களுக்கு
அழைப்பு வரும். அப்போது தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவெடுக்கலாம்' என
தெரிவித்துள்ளார். இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும்
மகிழ்ச்சியுடன் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
பணம் கேட்டு நச்சரிப்பு:
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வை ஆதரிக்க
சிறிய கட்சிகள் போட்டி போட்டு களம் இறங்கி உள்ளன. அக்கட்சிகளின் தலைவர்கள்
அனைவரும் தேர்தலில் போட்டியிட 'சீட்' எதிர்பார்க்கின்றனர். கிடைக்காத பட்சத்தில்
தி.மு.க.,வை ஆதரித்து கடிதம் கொடுத்த அமைப்புகள்:
சிவாஜி
சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன்கிராமணி மக்கள் வாழ்வுரிமை
நலச்சங்கம்தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்பெரியார் -
அம்பேத்கர் முன்னேற்ற கழகம்ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம்தென்னிந்திய
விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம்அகில இந்திய உண்மை கிறிஸ்தவ கவுன்சில்புரட்சி
பாரத மக்கள் கட்சிஇந்திய மக்கள் முன்னேற்ற கட்சி உட்பட 19 அமைப்புகள்.- நமது நிருபர் - தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக