விஜயகாந்த் முடிவால் மற்ற கட்சிகளுக்கு சாதகம், பாதகம் இருக்கட்டும் அவருடைய கட்சிக்கு என்ன இலாபம். விஜயகாந்தின் தேமுதிக கடந்த வந்த பாதையை கொஞ்சம் பார்த்தல் சில விஷயங்கள் புரியும். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த மறு வருடம் 2006-ல் சட்டமன்ற தேர்தலை எந்த கூட்டணியும் இன்றி தனியாக சந்தித்தார். அப்போது அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு முக்கிய காரணம் விஜயகாந்த் பிரித்த ஓட்டுகள்தான். ஏனென்றால் பெரும்பாலான அதிமுக ஓட்டுகள் தான் தேமுதிகவிற்கு சென்றிருந்தது. அவர் வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டணி சேர்ந்தா சூட்கேஸ் கிடைக்கும் என்பது பழைய டெக்னிக் . கூட்டணிக்கு டாட்டா காட்டுவதற்கும் சூட்கேஸ் வாங்கி.... தமிழக வரலாற்றிலேயே முதல் முதல் முறையாக....அடப்போங்க.
இதனால் முதல் தேர்தலிலேயே அதன் வாக்கு வங்கி 10 சதவிகிதத்தை தொட்டது. திமுகவும் குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்று பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தது. இங்கு ஒரு விஷயம் நன்றாக புரியும். அதிமுக - திமுக அல்லாத புதிய மாற்றத்தை மக்கள் விரும்பிய தேர்தல் இதுவாக தான் இருக்கும். அதனை தொடர்ந்து 2009- ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலிலும் ஒவ்வொரு தொகுதிகளிலும் ஓட்டை பிரிக்க முடிந்ததே தவிர எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. மீண்டும் அதிமுகவின் வாக்குகள் சிதறின.
தங்களுடைய ஓட்டுகள் விஜயகாந்த் மூலமாக உடைவதை உணர்ந்த அதிமுக, பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் மூலமாக தூது அனுப்பி தேமுதிகவை, அதிமுக கூட்டணியுடன் இணைய வைத்து 2011- ம் ஆண்டில் அதிமுக ஆட்சியை அமைத்தது மட்டுமல்லாமல் தனது வாக்கு வங்கியையும் தக்க வைத்து கொண்டது.
இதன் பிறகு தான் விஜயகாந்தின் தனித்துவம் உடையது. தமிழகத்தில் உள்ள கட்சிகளின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக மாறி போனார். அதிமுக - திமுகவிற்கு மாற்றாக இருப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பு குறைந்து, அவருகென்று இருந்த முக்கியத்துவம் குறைய தொடங்கியது. பின்னர் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிட்டு தேர்தலை சந்தித்து கூட்டணி கட்சிகள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும், விஜயகாந்தால் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. அப்போது தேமுதிகவின் வாக்கு வங்கி 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைந்திருந்தது.
ஆனால் டெல்லியில் அவர் பத்திரிக்கையாளர்கள் முன் நடந்து கொண்டவிதம் அனைவரையும் முக சுழிக்க வைத்தது. எதிர்கட்சிகளை தனது தலைமையில் கீழ் ஒருங்கிணைக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைத்த போதும் அதையும் தவற விட்டார்.
அரசியலில் அனுபவமிக்க பண்ருட்டி ராமசந்திரன் போன்றவர்களை தேமுதிக இழந்ததன் மூலம், இக்கட்டான சூழ்நிலையில் விஜயகாந்திற்கு வழிகாட்டவோ, முடிவெடுக்கவோ ஆள் இல்லாமல் திணறி வருவதை கடந்த காலங்களில் அவருடைய செயல்களில் தெளிவாக உணரலாம். சட்டசபை தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே பல்வேறு கட்சிகள் கூட்டணிக்கு அச்சாரம் போட்டது மட்டுமில்லாமல், பல்வேறு கட்ட பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. மற்ற கட்சிகள் குறிப்பாக மதிமுக, விசிக, கம்யுனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணியையும் அமைத்து செயல் பட்டு அரசியல் வியூகங்களை கவனித்து வருகின்றனர்.
தனித்து போட்டி விஜயகாந்த் அறிவித்த சில நேரங்களிலேயே எங்கு பார்த்தாலும் அவரது முடிவால் யாருக்கு சாதகம் அல்லது பாதகம் என்று நடக்க தொடங்கின. ஆனால் எவருமே இதனால் விஜயகாந்திற்கும் அவரது கட்சிக்கும் என்ன இலாபம் என்று வாய் கூட திறக்கவில்லை.
ஏற்கனவே தனது கட்சியின் 9 எம்.எல்.ஏ-களையும், அனுபவமிக்க சில தலைவர்களையும் இழந்து விட்டு இப்போது இருக்கும் 5 சதவிகித வாக்குகளை நம்பி தனித்து நிற்கும் தேமுதிக சட்டமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- முகமது பைரோஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக