சனி, 19 மார்ச், 2016

தி.மு.க கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி.... ஸ்டாலின் ஜவாஹிருல்லா சந்திப்பு.

மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைகிறது. அதன் தலைவர் ஜவஹிருல்லா கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்தார்< ஜவாஹிருல்லா தலைமை யில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாறியது. அப்போது நடந்த பாராளு மன்ற தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிட்டது. அதன்பிறகு 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது.
அந்த கட்சிக்கு ராமநாத புரம், ஆம்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம்பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி யில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி தோல்வி அடைந் தார்.


டெல்லி  மேல்-சபை தேர்தல் வந்தபோது மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. பக்கம் சாய்ந்தது. தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தது.  பின்னர் 2014-ம் ஆண்டு  நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் நீடித் தது. அந்த கட்சிக்கு ராமநாத புரம் தொகுதி ஒதுக்கப் பட்டது. இதில் தோல்வியை தழுவியது.
தேர்தலுக்கு   பிறகு தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது. வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய மக்கள் நலக்கூட்டு இயக்கத் தில் இணைந்து செயல்பட்டு வந்தது.  அந்த  இயக்கம் கூட்டணியாக  மாற்றப் பட்டதும்  அதில்  இருந்து ஜவாஹிருல்லா  விலகி னார்.

பின்னர்  மனித  நேய மக்கள் கட்சி  அ.தி.மு.க. ஆதரவு நிலையை எடுத்தது. இதற்கிடையே  ஜவாஹிருல்லாவுக்கும், பொதுச் செயலாளராக இருந்த தமிமுன் அன் சாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தமிமுன் அன்சாரி தனிக்கட்சி தொடங்கினார்.இந்த நிலையில் தற் போதைய சட்டசபை தேர்த லில்  தி.மு.க.  கூட்டணி யில் இணைய மனித நேய மக்கள் கட்சி முடிவு செய் துள்ளது.

இதைத்தொடர்ந்து ஜவாஹிருல்லா  இன்று  அறிவாலயம் சென்று தி.மு.க.  பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: