
மும்பை: வளரும் தலைமுறையினரிடம் இந்தியா பற்றிய பெருமையை எடுத்துக்கூறும் வகையில், பாரத் மாதா கி ஜே என அனைவரும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என ஆர்.எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதற்கு போட்டியாக, நான் அவ்வாறு கூற மாட்டேன் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவாய்சி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அவர், நான் பாரத் மாதா கி ஜே எனக்கூற மாட்டேன். பாகவத், இனி நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். எனது கழுத்தில் கத்தியை வைத்து சொல்லச்சொன்னாலும், நான் அவ்வாறு கூற மாட்டேன். பாரத் மாதா கி ஜே என கூற வேண்டும் என அரசியல் சாசனத்தில் கூறப்படவில்லை. நான் தொடர்ந்து இஷ்ரத் ஜகான் குடும்பத்தினருக்கு ஆதரவு அளிப்பேன் எனக்கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாரத மாதா கீ ஜே ன்னு சொல்லிட்டு 10,000 கோடி, 20,000 கோடி கொள்ளைக்காரங்களை எல்லாம் ரக்கமெண்டேசன் லட்டர் கொடுத்து லண்டனுக்கு தப்பிக்க விட்டுறாங்கோ விபரம் புரியாத ஆளா இருக்கியே அப்பா ....
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது பற்றி கேட்டதற்கு ஒவாய்சி கூறுகையில், நான் எனது கருத்தில் உறுதியாக உள்ளேன். இதில் எந்த சட்டத்தையும் விதியையும் மீறவில்லை. பயமுறுத்துவதற்கு பாகவத் யார்? தங்களது கொள்கையை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது எனக்கூறினார்.
தனியார் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒவாய்சி கூறியதாவது: இந்த கோஷத்தை கூறித்தான் எனது நாட்டுபற்றை நிருபிக்க வேண்டும் என யாரும் என்னை கட்டாயப்படுத்தக்கூடாது. ஒரு கோஷம் மட்டும் நாட்டுப்பற்றின் அளவுகோளாக இருக்க முடியாது. இந்த கோஷத்தை யார் எழுப்பினாலும், அதில் எனக்கு பிரச்னையில்லை. ஆனால் எனது நாட்டுப்பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. இவ்வாறு கோஷம் எழுப்ப சட்டத்தில் எந்த விதியும் உள்ளதா? ஒருவரின் நாட்டுப்பற்று பற்றி கேள்வி கேட்க ஆர்.எஸ்.எஸ்., யார்? அந்த அமைப்பிற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த கோஷத்தை எழுப்பாத பல முஸ்லிமகள் இந்திய ராணுவத்தில் உள்ளனர். நாட்டை விரும்புகிற உங்களது விருப்பம் எனது பார்வையில் வேறு. நான் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை கூறியுள்ளேன். பாகவத்திற்கு பதிலளிக்க இதனை கூறுகிறேன் என்றார்.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பியதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, இந்தியாவின் பெருமையை வளரும் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல, அவர்களுக்கு பாரத் மாதா கி ஜே என சொல்ல கற்றுத்தர வேண்டும் எனக்கூறியிருந்தார்.
ஒவாய்சி கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் ராம்தாஸ் கடம், பாரத் மாதா கி ஜே எனக்கூற விரும்பாவிட்டால் ஒவாய்சி பாகிஸ்தானுக்கு செல்லலாம். இது குறித்து மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறினார்.
மாநில நிதியமைச்சர் சுதீர் முங்கன்திவார் கூறுகையில், ஒவாய்சி பேச்சு குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனக்கூறினார்.
ஒவாய்சி கருத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மணிஷ் திவாரி கூறினார்.
ஒவாய்சி பாரத் மாதா கி ஜே எனக்கூற வேண்டும் எனக்கூறியுள்ள சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ., அபுஆஸ்மி, இந்த விவகாரத்தை பா.ஜ.,வும், சிவசேனாவும் அரசியலாக்க முயற்சி செய்வதாக கூறினார். dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக