வியாழன், 12 மார்ச், 2015

பர்மா பஜாரில் என் பாட்டுக்களை விக்கிராய்ங்கோ ! இளையராஜா சிபிசிடியில் முறையிட்டார்

தான் இசையமைத்த பாடல்களின் சி.டி.க்கள் உரிமம் இன்றி சென்னை பர்மா பஜாரில் விற்பனை செய்யப்படுவதாக, சி.பி.சி.ஐ.டி.யில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் செய்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் இளையராஜா சார்பில், அவரது வழக்குரைஞர் புதன்கிழமை வழங்கிய புகார் மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நான் இசையமைத்த பாடல்களை சில நிறுவனங்களுக்கு மட்டும் சி.டி.யாக குறிப்பிட்ட காலத்துக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருந்தேன். இதற்காக அவர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தேன். இந்நிலையில், ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் சிலர், எனது பாடல்களை எவ்வித உரிமமும், அனுமதியும் இன்றி விற்பனை செய்து வருகின்றனர். தன்னை முற்றும்  துறந்த பரப்பிரமம் என்று வேஷம் போட்டு  திரிந்த  இந்த காரியகிறுக்கன் S.J.சூரியாவின் இசை படம் வந்ததில் இருந்து ஒரே அப்செட் . பேராசையும் அகம்பாவமும் தலைக்கேறிவிட்டது . அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிபாய்ன்

குறிப்பாக பர்மா பஜாரில் உள்ள சில கடைகளில் உரிமம் இல்லாத எனது பாடல் சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் விளைவாக பல்வேறு வகைகளில் எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நான் இசையமைத்த பாடல்களை எவ்வித உரிமமோ, அனுமதியோ இன்றி விற்பவர்கள் மீது காப்புரிமைச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.தாணு, துணைத் தலைவர் எஸ்.கதிரேசன், நிர்வாகிகள் டி.ஜி. தியாகராஜன் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். இந்த மனுவில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்களின் சி.டி.க்களை உரிய அனுமதியின்றி தயாரிப்பவர்கள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இரு மனுக்களையும் சி.பி.சி.ஐ.டி. திருட்டு சி.டி. ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமி பெற்றுக் கொண்டா dinamani.com

கருத்துகள் இல்லை: