புதன், 11 மார்ச், 2015

மரண படுக்கையில் இருப்போர் உயிரை போக்கிக்கொள்ள அனுமதிக்கும் சட்டம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதம்


மரணத்தை தவிர்க்க முடியாது என உறுதியாக தெரிந்தவர்கள் இறக்கும் வரை தூக்கத்தில் இருக்க அனுமதிக்கும் சட்ட மசோதா தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் விவாதம் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் பலர் கொடிய நோய்கள் மற்றும் விபத்துகளில் பாதிக்கப்பட்டு இனிமேல் எந்த விதத்திலும் பிழைக்க முடியாது என்று தெரிந்த பின்னரும், மரணம் வரையில் கொடுமையான துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. இவர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்வை தாங்களே முடித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டி போராடி வருகிறார்கள்.> இதே கோரிக்கை பிரான்சிலும் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது. இதற்கு அனுமதிக்கும் சட்டம் தொடர்பாக நாளை மறுதினம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. உலகில் பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே மரணத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: