செவ்வாய், 10 மார்ச், 2015

ஜெயாவின் விடுதலைக்காக அறநிலைய துறையின் செலவில் தினசரி பிரசாதம் வழங்க முடிவு.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில், தற்போது அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. பிரார்த்தனைகள்: அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் துவங்கி, வழக்கில் இருந்து அவர் விடுதலை பெற வேண்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு பிரார்த்தனைகள், ஆளுங்கட்சியினரால் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக, ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே, அவரது விடுதலைக்காக செய்யப்பட்ட வழிபாடுகளாக தான் இருந்தன. ஜெயலலிதா விடுதலைக்காக, அறநிலையத் துறை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ஏற்பாடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.  அன்றாடம் வரும் ஐந்து கோவில் பிரசாதம்: ஜெ., விடுதலைக்காக அறநிலையத் துறை விசேஷ ஏற்பாடு! இதைதான் நாடு நாறிக்கிடக்கிறது என்பது
அதுபற்றி, இந்து அறநிலையத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோவில்கள் உள்ளன. சிறிய, பெரிய கோவில்களான இவற்றில் இருந்து, தினமும் ஐந்து கோவில்களில் வழிபாடு நடத்தப்பட்டு, அந்த பிரசாதம், சென்னைக்கு எடுத்து வரப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. பார்த்தசாரதி கோவிலில்: அதன்படி, நாள் தோறும் ஐந்து கோவில்களின் பிரசாதம், கோவில் ஊழியர்களால் சென்னைக்கு எடுத்து வரப்படுகிறது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் அவை ஒப்படைக்கப்படும். காலை, 10:00 மணிக்கெல்லாம், பிரசாதங்கள் வந்து சேர்ந்து விடுகின்றன. 10:30 மணியளவில், பார்த்தசாரதி கோவில் அதிகாரி ஒருவர், அந்த ஐந்து கோவில்களின் பிரசாதத்தையும் எடுத்துச் சென்று, போயஸ் தோட்டத்தில் வழங்கி வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக, நாள் தவறாமல் இப்பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு கோவிலில் இருந்தும், ஊழியர்கள் எடுத்து வரும் செலவை, அறநிலையத் துறையே ஏற்கிறது. என்றைக்கு எந்தெந்த கோவில் என்பதையும், அறநிலையத் துறை துணை ஆணையர்கள் முடிவு செய்து கொள்கின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: