புதன், 11 மார்ச், 2015

மன்மோகன்சிங் நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் சம்மன்! . நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு

டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஏப்ரல் 8-ந் தேதி நேரில் ஆஜராகக் கோரி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் 2005 ஆம் ஆண்டு குமார் மங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஷாவின் தலபிரா நிலக்கரி சுரங்கம் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது வழக்ககுமார் மங்கலம் பிர்லா, மன்மோகன்சிங்குக்கு 2 கடிதங்கள் எழுதி கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த ஒதுக்கீடு நடந்தது என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்த கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதால் அடுத்த கட்ட விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ள மன்மோகன்சிங் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித் துறை செயலாளர் பி.சி. பாரக் உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது
  /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: