சனி, 14 மார்ச், 2015

தலைமன்னார் புதிய ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்! இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட ...

இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தலைமன்னார்-மது ரோடு இடையிலான புதிய ரெயில் சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடந்த 25 ஆண்டுகளாக ரெயில்கள் இயக்கப்படாத இந்த வழித்தடத்தில் இலங்கையின் வடக்கு கோட்ட இருப்புப்பாதை மறுசீரமைப்பு குழுவினர் சுமார் 265 கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய இருப்புப்பாதையை அமைத்து வருகின்றனர். இந்த பணிகளை இந்திய அரசுக்கு சொந்தமான ‘இர்க்கான் இண்டர்நேஷனல் நிறுவனம்’ செய்து வருகின்றது. இதில் முதல்கட்டமாக 63 கிலோ மீட்டர் நீளமுள்ள தலைமன்னார்-மது ரோடு இடையில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த வழித்தடத்தில் புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.


இதற்காக, அனுராதாபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தலைமன்னார் பகுதியை வந்தடைந்த மோடி, இவ்வழித்தடத்தில் முதல் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா முன்னிலையில் தலைமன்னார் ரெயில் நிலைய பெயர் பலகையையும் மோடி திறந்து வைத்தார். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய இந்த ரெயில் பயணத்தின் மூலம் உள்ளூர் மக்கள் குறுகிய நேரத்தில் பாதுகாப்பும், வசதியும் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்விழாவுக்கு பின்னர் யாழ்ப்பாணம் பகுதிக்கு நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார் maalaimalar.com

கருத்துகள் இல்லை: