வியாழன், 22 மே, 2014

அழகிரிக்கு அடுத்து கனிமொழியை ஓரம் கட்ட ஸ்டாலின் ஓவர் டைம் வேலை ! அதிமுகவின் அனுகூல சத்ரு ஸ்டாலின் ?

திமுகவில் இருந்து அழகிரி ஓரம்கட்டி உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் போல கனிமொழியையும் ஒதுக்கி வைக்கும் வரை மு.க.ஸ்டாலினின் 'உட்கட்சி போராட்டம்' தொடரும் என்றே சொல்லப்படுகிறது. லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. முட்டைதான் வாங்கியது. திமுக தேர்தலில் தோல்வியடைந்ததைப் பயன்படுத்தி அழகிரி தரப்பும், கனிமொழி தரப்பும் ஸ்டாலினுக்கு வேட்டு வைப்பதில் படுமும்முரம் காட்டியிருக்கின்றன.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே அழகிரி, ஸ்டாலினை நோக்கி காட்டம் காட்டினார். மறுநாள் கருணாநிதியை சந்தித்த கனிமொழி, கட்சியில் இனிமேலாது ஒழுங்கு நடவடிக்கை எடுங்க.. மாவட்ட செயலர்களை மாற்றிடுங்க.. எனக்கு இப்படித்தான் தேர்தல் முடிவு இருக்கும்னு தெரியும் என்றெல்லாம் ஏகத்துக்கும் பில்டப் கொடுத்திருக்கிறார் அழகிரி.
இது அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மு.க.ஸ்டாலினின் காதுகளுக்குப் போய்ச்சேர உச்சகட்ட கடுப்புக்குப் போயிருக்கிறார். வெளியில் இருந்து அழகிரி குடைச்சல் கொடுக்கிறார். உள்ளே இருந்து கொண்டே கனிமொழி குழிபறிக்கிறார் என்பது ஸ்டாலினின் கொந்தளிப்பு.
இந்த இருவரையும் முழுமையாக அடக்கி வைத்துவிட்டோம் என்ற நிம்மதி ஏற்பட்டால் மட்டுமே தம்மால் கட்சியை நிம்மதியாக ந்டத்த முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள்
இதைத் தொடர்ந்துதான் கோபாலபுரம் வீட்டுக்குப் போன ஸ்டாலின் கருணாநிதியிடம் ராஜினாமா செய்வதாக தெரிவித்து மோதியிருக்கிறார். அங்கு நடந்த விவாதத்தின் போது ஒரு கட்டத்தில் "அழகிரிகிட்ட கேட்கிறேன் நான்" என்று கருணாநிதி சொல்ல, அவர்கிட்டதான் கேட்க முடியும்.. வேறு யாரையும் உங்களால கேட்க முடியாதுல்ல என்று ஸ்டாலின் எகிறியிருக்கிறார்.
அதாவது கனிமொழியை உங்களால் கேள்வி கேட்க முடியாது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் ஸ்டாலின். கடைசியாக அழகிரி, கனிமொழி விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கவில்லை எனில் கட்சியை என்னால் நடத்த முடியாது என்று கறாராக சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
/tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: