தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று
மாலை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அமைச்சரவை மாற்றம்
தமிழக அமைச்சரவையில் இருந்து வேளாண்மைத்துறை அமைச்சர் எஸ்.தாமோதரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரை நீக்க வேண்டும் என்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையை தமிழக கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுபோல, அமைச்சரவையில் கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி, அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.கோகுல இந்திரா ஆகியோரை சேர்க்க வேண்டும் என்ற முதல்–அமைச்சரின் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார். முழுக்க முழுக்க ஒரு கட்டை பஞ்சாயத்து இயக்கம் மாதிரியே அதிமுக எப்போதும் இயங்கி வந்துள்ளது , அடிமைகள் கூடாரம்
அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண்துறை
அதன்படி, முதல்–அமைச்சர் பரிந்துரையின் பேரில் கீழ்க்கண்ட இலாகாக்கள் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதுவரை எஸ்.தாமோதரன் பொறுப்பில் இருந்த வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் பணி கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்பு பயிர் மேம்பாடு மற்றும் தரிசுநில மேம்பாடு ஆகிய துறைகள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கப்படுகிறது. அவர் வேளாண்மை துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
இதுவரை அமைச்சர் கே.பி.முனுசாமி பொறுப்பில் இருந்த நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்ப்புற மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தம், லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் எஸ்.பி.வேலுமணிக்கு ஒதுக்கப்படுகிறது. இனி அவர் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
கே.பி.முனுசாமிக்கு தொழிலாளர் நலன்
இதுவரை கே.டி.பச்சைமால் பொறுப்பில் இருந்த தொழிலாளர் நலன், மக்கள்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை காகித கட்டுப்பாடு மற்றும் ஊரக, கிராமிய வேலைவாய்ப்பு ஆகிய துறைகள் கே.பி.முனுசாமிக்கு ஒதுக்கப்படும். அவர் இனி தொழிலாளர் நலன் அமைச்சர் என அழைக்கப்படுவார்.
இதுவரை பி.வி.ரமணா பொறுப்பில் இருந்த வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை கலெக்டர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் வழங்கல் குறித்த சட்டம் உள்பட கடன் நிவாரணம், சீட்டுகள், கம்பெனிகள் பதிவு ஆகிய துறைகள் இனி ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்படும். அவர் வருவாய்த்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.
கோகுல இந்திராவுக்கு கைத்தறித்துறை
இதுவரை டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ் பொறுப்பில் இருந்த கைத்தறி மற்றும் ஜவுளித்துறை எஸ்.கோகுல இந்திராவுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர் இனி கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.
இதுவரை ஆர்.பி.உதயகுமார் பொறுப்பில் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை டாக்டர் எஸ்.சுந்தர்ராஜூக்கு ஒதுக்கப்படும். அவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் அமைச்சர் என அழைக்கப்படுவார்.
இன்று பதவி ஏற்பு
புதிய அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா இன்று (செவ்வாய்கிழமை) மாலை 4.40 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
தமிழக அமைச்சரவையில் இது 13–வது முறையாக மேற்கொள்ளப்படும் மாற்றமாகும். கடந்த 9–12–2013 அன்று அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகியது. அதே நேரத்தில், அமைச்சர் பி.வி.ரமணா, எம்.சி.சம்பத், தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோருக்கு இலாகாக்கள் மாற்றப்பட்டன. உதயகுமார் 11–ந் தேதி பதவியேற்றார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக