செவ்வாய், 20 மே, 2014

கத்தோலிக்க பாதிரியார்களை திருமணம் செய்ய அனுமதியுங்கள் ! பெண்கள் கடிதம்


கத்தோலிக்க பாதிரியார்களை திருமணம் செய்ய அனுமதிக்கும்படி போப்
ஆண்டவருக்கு பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. இந்த பழக்கம் கடந்த 1000 ஆண்டகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இத்தாலியை சேர்ந்த 26 பெண்கள் போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாங்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவ மத பாதிரியார்களை காதலிக்கிறோம். அவர்களும் எங்களை மனமாற விரும்புகின்றனர்.
ஆனால் எங்களை திருமணம் செய்ய விடாமல் மத கோட்பாடு தடுக்கிறது.
இதனால் நாங்கள் கடும் துயருக்கு ஆளாகி இருக்கிறோம். அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனவே அவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதியுங்கள்.

உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம். பல கஷ்டங்களில் தவிக்கும் அவர்களுக்கு மாற்றம் தாருங்கள். இதன் மூலம் அனைத்து தேவாலயங்களிலும் நல்லது நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
கடிதத்தில் தங்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை மட்டும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர். பல டெலிபோன் நம்பர்களையும் எழுதியுள்ளனர். இக்கடிதம் வாடிகன் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: