புதன், 21 மே, 2014

பா.ஜ.,விடம் விஜயகாந்த் அமைச்சர் பதவி கேட்கிறார் ! ஜெயாவை சமாளிக்க சுதீசுக்கு புரோமோஷன் தேவையாம் !

இரண்டு ஆண்டுகளுக்கு, முதல்வர் ஜெயலலிதாவை சமாளிக்க
வேண்டுமானால், தே.மு.தி.க.,விற்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, பா.ஜ., மேலிட தலைவர்களிடம், விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட, தே.மு.தி.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. எப்படி வழிநடத்துவது...: எதிர்பாராத இந்த தோல்வியால், தே.மு.தி.க., கூடாரம் கலகலத்து கிடக்கிறது. தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் என, பலரும் தங்கள் அரசியல் வாழ்க்கை குறித்த கவலையில் உள்ளனர். சட்டசபை தேர்தல், தமிழகத்தில், 2016ம் ஆண்டு நடக்க உள்ளது. இரண்டு ஆண்டுகள் வரை, அதற்கு கால அவகாசம் இருப்பதால், அதுவரை கட்சியை எப்படி வழிநடத்துவது என தெரியாமல், தே.மு.தி.க., தலைமையும் விழிபிதுங்கி நிற்கிறது. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே எந்தன் ஐயனே. யாராவது பார்த்து என் குடும்பத்துக்கு பிச்சை போடுங்கப்பா.
இந்நிலையில், பா.ஜ., கூட்டணி தலைவர்களை, நரேந்திர மோடி, நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். இதில் பங்கேற்பதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர், அங்கு சென்றனர். தேர்தல் தோல்வியால் சோகத்தில் இருந்த விஜயகாந்த், ஒருவித தயக்கத்துடனேயே, மோடியை வாழ்த்தினார்.

அப்போது, விஜயகாந்தை, இரண்டு கைகளாலும் மோடி கட்டித் தழுவி, நன்றி தெரிவித்தார். இதன்பின், பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்த விஜயகாந்த், தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரங்கள், கட்சியின் நிலைமை குறித்து எடுத்துரைத்தார். 15 நிமிடம் வரை, தன் நிலையை விஜய காந்த் அவர்களிடம் தெளிவுப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியை உருவாக்கி உள்ளதால், அக்கட்சி தமிழகத்தில் எழுச்சிப் பெற்றுள்ளது. ஓட்டு வங்கியும், 5.2 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இதை மேலும், அதிகரிக்க வேண்டும் என, மோடி உள்ளிட்ட பா.ஜ., மேலிட தலைவர்கள் விரும்புகின்றனர். லோக்சபா தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணியை, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை, தொடர வேண்டும் என, அவர்கள் விரும்புகின்றனர். இதுகுறித்த தங்களது எண்ணத்தை, டில்லியில் விஜயகாந்திடம் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு விஜயகாந்த், ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா தன் மீதும், மனைவி, மைத்துனர் மீதும், அவதூறு வழக்குகளை தொடர்ந்து இருக்கிறார். இதேபோன்ற வழக்குகள் இனி அதிகரிக்கும். விரைவில் சட்டசபை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் ஆபத்து காத்திருக்கிறது. தே.மு.தி.க.,வினரை இழுக்கும் வேலைகளை, அ.தி.மு.க.,வினர் துவக்குவர்.



நம்பிக்கையை...:
இதனால், கட்சியின் செல்வாக்கு சரியும் வாய்ப்புள்ளது. இரண்டு ஆண்டுகள் வரை, கட்சிக்கு பிரச்னை வராமல் கொண்டு செல்ல வேண்டுமானால், தே.மு.தி.க.,விற்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்க வேண்டும். இதற்கு ஏதுவாக, சுதீஷுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை அளிக்க வேண்டும் என, பா.ஜ., மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளார். வரும் 26ம் தேதி, மோடி தலைமையிலான அரசு, பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக, இதுகுறித்து தங்கள் முடிவை தெரிவிப்பதாக, பா.ஜ., மேலிட தலைவர்கள், விஜயகாந்திடம் உறுதி அளித்துள்ளனர். தேர்தல் தோல்வியால் சோர்ந்து கிடந்த விஜயகாந்திற்கு, இது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: