புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் அதன்
கூட்டணி கட்சிகள், தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், ராஜ்யசபாவில்
நிலைமை தலைகீழாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அந்த சபையில், காங்கிரஸ்
மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தான் அதிக, எம்.பி.,க்கள் உள்ளனர்.மொத்தம்,
543 லோக்சபா எம்பி.,க் களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில்,
எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ., 282 இடங்களைப் பெற்று,
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அதன் கூட்டணி கட்சிகள், 53
இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக
கூட்டணியின் பலம், 335 ஆகியுள்ளது. அதே நேரத்தில், கடந்த 2009 தேர்தலில்,
206 இடங்களில் வெற்றி பெற்றிருந்த, சோனியா தலைமையிலான காங்கிரஸ், இந்த
முறை, 44 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகள், 15
இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
கூட்டணி, 59 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. பா ஜ க தன்னிச்சையான முடிவினை எடுக்கவே இயலாது ! காங்கிரஸ் ஆட்சிக்கு வெறும் அரசியல் நோக்கத்தோடு முட்டு கட்டைகள் போட்டதன் பலனை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது
லோக்சபாவில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக்கு போதுமான பலம் உள்ள நிலையில், ராஜ்யசபாவின் மொத்த, எம்.பி.,க்கள் பலத்தில், பாதியளவு கூட, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இல்லை. ராஜ்யசபாவின் மொத்த, எம்பி.,க் களின் எண்ணிக்கை, 250. இதில், இப்போதைய நிலையில், பா.ஜ.,வுக்கு, 46 எம்.பி.,க்களும், காங்கிரசுக்கு, 68 எம்.பி.,க்களும் உள்ளனர். காங்கிரஸ் தான், ராஜ்யசபாவில், அதிக, எம்பி.,க்களை கொண்டுள்ள கட்சி.லோக்சபாவில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பி, அவர் ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாகும். அந்த வகையில், லோக்சபாவில் எளிதில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், ராஜ்யசபாவில் தடுமாற்றத்தை சந்திக்கும். ஏனெனில், அந்த சபையில், காங்கிரஸ் வசம் தான் அதிக, எம்.பி.,க்கள் உள்ளனர். அந்த கட்சி, பா.ஜ., அரசின் மசோதாக்களை முடக்க வாய்ப்பு உள்ளது. எனினும், முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற நினைக்கும் பா.ஜ., அரசு, அந்த மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறாது என நினைத்தால், பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தை கூட்டி, லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பி.,க்களின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில், மசோதாக்களை நிறைவேற்ற முயற்சிக்கலாம்.
தற்போதைய நிலையில், ராஜ்யசபாவில், 245 எம்.பி.,க்கள் உள்ளனர். மசோதாக்கள் நிறைவேற்ற, 123 எம்.பி.,க்கள் ஆதரவு வேண்டும். பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின், எம்.பி.,க்களை சேர்த்தாலும் பலம், 65 ஆகத் தான் இருக்கும். இதில் இன்னொரு சிக்கலாக, இப்போதைக்கு ராஜ்யசபா தேர்தல் இல்லை. 2016ல் தான், மூன்றில் ஒரு பகுதி, ராஜ்யசபா, எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இன்னும் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக, மோடி தலைமையிலான, பா.ஜ., அரசுக்கு, ராஜ்யசபாவில் சிக்கல் தான். எனவே, ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்ற, தமிழகத்தின், அ.தி.மு.க., மற்றும் மேற்கு வங்கத்தின், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவை, பா.ஜ., பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில், கடந்த ?? ஆண்டுகளாக மத்தியில் இருந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், ராஜ்யசபாவில், தனிப்பெரும்பான்மை இருக்கவில்லை. அந்த கூட்டணிக்கு, 102 எம்.பி.,க்கள் ஆதரவு தான் இருந்தது. அதனால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, பா.ஜ.,வின் ஆதரவை, காங்கிரஸ் கூட்டணி அரசு பெற்று வந்தது. அது போலவே, இந்த முறையும், முக்கிய மசோதாக்களை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற, காங்கிரசின் ஆதரவு, மோடி அரசுக்கு தேவைப்படும். அதனால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு, சர்ச்சைக்குரிய சட்டங்களை, மோடி அரசால் நிறைவேற்ற முடியாது.
பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட, ஜனாதிபதியின் ஒப்புதல் அவசியம். இன்னும் மூன்றாண்டுகளுக்கு, பிரணாப் முகர்ஜி தான் ஜனாதிபதி. கூட்டுக்கூட்டம் கூட்டப்படும் போது, அதன் பலம், லோக்சபாவின், 545 மற்றும் ராஜ்யசபாவின் 245 எம்.பி.,க்கள் சேர்த்து, 790 ஆக இருக்கும். இருசபைகளின் கூட்டு கூட்டத்தில், மசோதாக்களை நிறைவேற்ற, 396 எம்.பி.,க்கள் ஆதரவு வேண்டும். பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மொத்த பலம், 335 தான். இன்னும், 61 எம்.பி.,க்களின் ஆதரவு இருந்தால் தான், கூட்டுக்கூட்டத்திலும், மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்ற நிலை காணப்படுகிறது.
ராஜ்யசபாவின் பலம், 250 எம்பி.,க்களாக இருந்தாலும், அவர்களில், 238 பேர் தான் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதியுள்ள, 12 பேரை, ஜனாதிபதி தான் நியமிப்பார். ராஜ்யசபாவின் தற்போதைய பலம், 245; இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; 12 பேர் நியமன எம்.பி.,க்கள். பதவிநீக்கம், மரணம் போன்றவற்றால், ஐந்து காலியிடங்கள் உருவாகியுள்ளன.

கூட்டு கூட்டத்திலும் சாத்தியமில்லை:

ராஜ்யசபாவில் 12 நியமன எம்.பி.,:
ராஜ்யசபாவின் பலம், 250 எம்பி.,க்களாக இருந்தாலும், அவர்களில், 238 பேர் தான் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதியுள்ள, 12 பேரை, ஜனாதிபதி தான் நியமிப்பார். ராஜ்யசபாவின் தற்போதைய பலம், 245; இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; 12 பேர் நியமன எம்.பி.,க்கள். பதவிநீக்கம், மரணம் போன்றவற்றால், ஐந்து காலியிடங்கள் உருவாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக