வெள்ளி, 23 மே, 2014

காங்கிரசை காப்பாற்ற பிரியங்கா வருகிறார் ? ராகுல் மெதுவாக ஒதுங்குவார் ?

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பை பிரியங்கா காந்தி ஏற்க வேண்டும்
முன்னாள் மத்திய மந்திரி கே.வி. தாமஸ் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 50–க்கும் குறைவான இடங்களே கிடைத்தன. சவாலான போட்டியை காங்கிரஸ் கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை எப்போதும் பெற்றிடாத தோல்வியை கண்டிருப்பது அக்கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
44 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் தொண்டர்களிடம் இருந்து எழுந்துள்ளது.

தேர்தல் முடிவு வெளியானதுமே காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்நின்று பிரியங்காவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். உ.பி. மாநிலம் அகமதாபாத்திலும், பிரியங்காவுக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் கட்சிக்குள் அதிர்ச்சி அலைகள் அடிக்க ஏற்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய மந்திரியாக இருந்த கே.வி. தாமஸ், கட்சியின் தொண்டர்கள் பிரியங்கா காந்தி கட்சியில் இணைவதில் ஆர்வமாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவர் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதற்காக தொண்டர்கள் அவர் கட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார்.
“நாட்டு மக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சிக்கு வருவதை விரும்புகின்றனர் என்று” கே.வி. தாமஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரியங்கா மீது மக்களிடம் பெரிய பற்று உள்ளது. பிரியங்கா தனது பாட்டி இந்திரா காந்தியை நினைவு படுத்துகிறார். தனது நடை மற்றும் பேச்சில் பிரியங்கா தனது பாட்டி இந்திராவை ஒத்துள்ளார். இந்திரா நாட்டு மக்கள் அனைவரையும் விரும்பினார் மற்றும் மதிப்பளித்தார் என்று தாமஸ் கூறியுள்ளார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: