வியாழன், 24 அக்டோபர், 2013

தமிழின் சிறந்த இலக்கியங்களை வடநாட்டவர்தான் களவாடிச் சென்றுள்ளனர்

thanthieதினத்தந்தியின் சாட்டையடி!

ன்றைய தினத்தந்தி நாளிதழில் புத்தக மதிப்புரை பகுதியில் தமிழறிஞர் தமிழண்ணல் எழுதிய ‘இரா. நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்’ என்ற நூல்  இடம் பெற்றிருக்கிறது.
அதில் ஒவ்வொரு வார்த்தையும் உணர்வோடு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதுதான் அது :
“தொல்லியல் ஆராய்ச்சியாளரான இரா. நாகசாமி, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். ‘தமிழையும், சமஸ்கிருதத்தையும் காட்டும் கண்ணாடி’ (THE MIRROR TAMIL AND SANSKRIT) என்பது அந்த நூலின் பெயர்.
தமிழ் தனித்தன்மையுடன் வளரவில்லை என்றும் சமஸ்கிருத சொற்களைக் கடன் வாங்கியே வளர்ந்தது என்றும் இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவில் வடமொழியை உயர்த்தியும், தமிழை தாழ்த்தியும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், தமிழறிஞர் தமிழண்ணல் “இரா. நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்” என்ற தலைப்பில் சிறந்த புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழின் சிறப்பு குறித்து, மேல்நாட்டு அறிஞர்களே வியந்து புகழ்ந்து எழுதியிருப்பதை எல்லாம் சுட்டிக்காட்டி இருக்கிறார். தமிழின் சிறந்த இலக்கியங்களை வடநாட்டவர்தான் களவாடிச் சென்றுள்ளனர் என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகிறார்.
தமிழ்ப்பகைவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் நூலை எழுதியுள்ள தமிழண்ணலுக்கு தமிழகம் கடமைப்பட்டுள்ளது.” – தினத்தந்தி (23.10.2013)
‘களவாடி’ – ‘பதிலடி’ – ‘வடமொழியை உயர்த்தியும், தமிழை தாழ்த்தியும்’ – ‘தமிழ்ப்பகைவர்களுக்கு சாட்டையடி’ – ‘தமிழண்ணலுக்கு தமிழகம் கடமைப்பட்டுள்ளது’
-இப்படி தமிழ் உணர்வு கொப்பளிக்க கோபத்தோடு இந்த நூலை அறிமுகம் செய்தவருக்கும் அதை அனுமதித்த அதன் ஆசிரியருக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வோம்.
‘வணிக பத்திரிகையில் இப்படி எல்லாம் எழுத முடியாது’ என்று கதையளப்பவர்கள் மத்தியில், அதுவும் வெகுஜன இதழ்களில், முதல் இடத்தில் இருக்கிற ஒரு வணிக இதழில் ‘தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி’ என்று தலைப்பிட்ட துணிச்சலுக்கு கூடுதலாக பாராட்டுவோம்.
தினமலர், தினகரன், தினமணி, தமிழ் இந்து இன்னும் பல பார்ப்பன ‘தமிழ்’ பத்திரிகைகளில் இது போன்ற மொழி நடையில் ஒரு புத்தக அறிமுகத்தை ஒருபோதும் பார்க்க முடியாது என்பதல்ல, பார்க்க முடியும். அது இந்து மதத்திற்கு எதிரான சம்ஸ்கிருதத்திற்கு எதிரான புத்தகமாக இருந்தால்..
**
தமிழ்த்தேசியவாதிகளிடமும் இதுபோன்ற தமிழ் உணர்வு கண்ணோட்டத்தை தான் எதிர்பார்க்கிறோம்.
ஆனால் அவர்களோ ‘ஆங்கிலத்தில் பேசினால் பல்லை உடைப்பேன்..  நாக்கை அறுப்பேன்..’ என்று ஆங்கிலத்திற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு;
‘தமிழ் நீசமொழி, இழிவான மொழி, வழிபாட்டுக்கு தகுதியானதல்ல’ என்று அவமானப்படுத்துகிற சமஸ்கிருத்திற்கு ஆதரவாக, தன் குடும்பத்தின் திருமணங்களை தமிழ் விரோத சம்ஸ்கிருத மந்திரங்கள் முழுங்க நடத்திவிடுகிறார்கள்.
என்ன பண்ணறது…
இங்கிலீசை கண்டுபுடிச்ச வெள்ளக்காரன் வெளிநாட்ல இருக்கான். எவ்வளவு வேணுமானாலும் திட்டலாம் பிரச்சினை இல்லை.
சமஸ்கிருத்தை உயர்வா மதிக்கிறவர்கள்தானே இங்க தமிழ் பத்திரிகையாளர்களாக இருக்கிறார்கள். சமஸ்கிருத்தை எதிர்ப்பது அல்லது மறுப்பது என்பது பார்ப்பன எதிர்ப்பாக மாறிபோதே.. ‘அவுங்க’ கோவிச்சிக்க மாட்டாங்களா.. அப்புறம்.. ?
அப்புறம் என்ன..? இந்து எதிர்ப்பு கண்ணோட்டம் இல்லாத தமிழ் உணர்வு, எப்போதுமே தமிழ் விரோத சம்ஸ்கிருத அடிமைதான்.
**
தமிழணண்ல் எழுதிய ‘இரா. நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்’ புத்தகம் வாங்க :
 தமிழ் பேராயம் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம், விலை – 120. mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: