வியாழன், 24 அக்டோபர், 2013

தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறைத்த சாப்ட்வேர் எஞ்சினியர்


ஹைதராபாத்தில் 2 டிரைவர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார் சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் என்ஜீனியர் என்று தெரிய வந்துள்ளது. 22 வயதான அந்தப் பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியில் சொல்லத் தயங்கியும், அஞ்சியும் அதை ரகசியமாக வைத்திருந்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. ஹைதராபாத் போலீஸாரின் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் காரிலும், வனப்பகுதியிலுமாக அந்தப் பெண், இரண்டு டிரைவர்களிடமும் சிக்கி சீரழிந்துள்ளார்.
குற்றச் செயலில் ஈடுபட்ட சதீஷ், வெங்கேஸ்வரலு ஆகிய இரு டிரைவர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
ஆனால் அந்தப் பெண் போலீஸில் கொடுத்த புகார்தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் தனது புகாரில் மறைத்துள்ளார். அதாவது, தான் பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
அப்பெண் கொடுத்துள்ள புகாரில், நான் ஷாப்பிங் முடித்து விட்டு இரவு 9 மணிக்கு டாக்சி பிடித்தேன். அப்போது டாக்சிக்குள் இன்னொருவரும் டிரைவருடன் அமர்ந்திருந்தார். டாக்சி எனது ஹாஸ்டல் பக்கம் போகாமல் வேறு பக்கமாக போவதை உணர்ந்து நான் எனது போன் மூலம் நண்பர்களை அழைத்தேன். கத்தவும் தொடங்கினேன். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தி விட்டார். நான் இறங்கி ஓடி விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் கூறுகையில், நடந்ததை எண்ணிப் பயந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையே அந்தப் பெண் மறைத்து விட்டார். உண்மையில், கொல்லூரு வனப்பகுதிக்கு அப்பெண்ணைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்னர்.
அந்தப் பெண்ணைக் காரில் கடத்திச் சென்றபோது கார், அருகில் உள்ள ஒரு பள்ளியைக் கடந்து சென்றபோது அந்தப் பள்ளியின் சிசிடிவி கேமராவில் அது பதிவாகியுள்ளது. ஆனால் காட்சி தெளிவாக இல்லை. இதுதொடர்பாக என்ஐஏ உதவியையும் நாடினோம். அவர்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட கார் வால்வோ கார் என்பதைக் கண்டுபிடித்தோம். அந்தக் காரில்தான் அப்பெண் கடத்தப்பட்டார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளோம் என்றார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: