

லண்டன்: டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது பயணிகளை சாந்தப்படுத்த வாசிக்கப்பட்ட வயலின் ஏலத்தில் விடப்பட்டது. அது எதிர்பார்த்ததை விட அதிகமாக ரூ. 8 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 792க்கு சென்றுள்ளது. கடந்த 1912ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய டைட்டானிக் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் 1,517 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். கப்பல் மூழ்குகையில் பயணிகளை சாந்தப்படுத்த இசைக் குழு தலைவர் வாலஸ் ஹார்ட்லி வயலின் வாசித்துள்ளார். ஹார்ட்லி வாசித்த வயலின் இங்கிலாந்தின் வில்ட்ஷயரில் உள்ள ஏல நிறுவனத்தில் நேற்று ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலம் ஆரம்பித்த 10 நிமிடத்தல் ஒருவர் அந்த வயலினை ரூ. 8 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 792க்கு வாங்கிவிட்டார்.
டைட்டானிக் மூழ்கும்போது வாசிக்கப்பட்ட வயலின் ரூ. 9 கோடிக்கு ஏலம் இந்த வயலின் கடந்த 2006ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையாகவே இது டைட்டானிக் விபத்தில் பலியான ஹார்ட்லி பயன்படுத்திய வயலின் தானா என்று பல கட்ட சோதனை செய்யப்பட்டது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் அது ஹார்ட்லி பயன்படுத்திய அதே வயலின் தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஜெர்மனியில் செய்யப்பட்ட இந்த வயலின் ஹார்ட்லிக்கு அவரது வருங்கால மனைவியான மரியா ராபின்சன் பரிசாக அளித்தது. வயலினில் நம் நிச்சயதார்த்தத்தின் போது வாலஸுக்காக மரியாவின் பரிசு என்று எழுதப்பட்டுள்ளது.
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக