வெள்ளி, 22 மார்ச், 2013

வாசன், அழகிரி, நெப்போலியன் ரகசியமாக சந்திப்பு

தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது மு.க.அழகிரி, டில்லியில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தார்! டில்லி அரசியல் வட்டாரங்களில் அவரை யாரும் கண்டுகொள்வதில்லை. அவர் பாட்டுக்கு (எப்போதாவது) அமைச்சுக்கு வருவார், போவார்.
ஆனால், தி.மு.க. ஆட்சியில் இருந்து விலகியபின், டில்லி அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படும் நபராகி விட்டார் அழகிரி. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. கடந்த செவ்வாய்க்கிழமை வெளியேறியது. சென்னையில் இருந்து வந்த உத்தரவுப்படி, தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பழநிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் தங்களின் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புதன்கிழமை அளித்தனர்.
ஆனால், மு.க.அழகிரி மிஸ்ஸிங்! (கூடவே இலவச இணைப்பாக நெப்போலியன்)
உடனே, டில்லி அரசியல் வட்டாரங்களின் பார்வை அவர் மீது பதிந்தது. “ஆகா.. இவர் வேறு ஒரு ட்ராக்கில் ஓடுகிறாரோ..”
பின்னர், மு.க. அழகிரியும், மத்திய இணை அமைச்சர் நெப்போலியனும் தனியே சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தந்தனர்.
அதன் பின்னரும், டில்லி மீடியா அழகிரி மீது ஒரு கண் வைத்திருந்தது. அவர்களுக்கு தீனி போடுவதுபோல மற்றொரு சம்பவம் நேற்று நடந்தது.
மு.க. அழகிரி, நெப்போலியன் ஆகியோர் நேற்று நண்பகலில் திடீரென மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனை சந்தித்துப் பேசினர். அழகிரிக்கு ப.சிதம்பரத்துடனும் சுமுக உறவு உண்டு. அவரை விட்டுவிட்டு, வாசனை ஏன் போய் சந்தித்தார்?
டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் இல்லத்துக்கு மு.க. அழகிரியும் நெப்போலியனும் சென்றபோது அங்கு பரபரப்பு நிலவியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு ரகசியமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள்? ஆட்சியில் இருந்து விலகிய நிலையிலும், தி.மு.க. தலைமை, அழகிரி மூலம் புது ரூட் போடப்படுகிறதா? இப்போது டில்லி மீடியாவில் அடிபடும் கேள்விகள் இவைதான்!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: