புதன், 10 அக்டோபர், 2012

Channai போலீஸ் கமிஷனர் நிருபர்கள் மோதல்



சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று மாலை நடந்தது.  புதிய கமிஷனராக ஜார்ஜ் பொருப்பேற்றபின் நடக்கும் முதல் சந்திப்பு இது. 
சென்னை ஐசிஎப் பகுதியில் மாணவன் ஒருவன் கடத்தப்பட்டு ஆந்திரமாநிலம் ஓங்கோல் அருகே நக்சல்கள் உள்ள பகுதியில் இருந்து மீட்கப்பட்டான்.  இது தொடர்பாக கமிஷனர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களுக்கு தகவல் வந்தது.
கமிஷனரின் முதல் சந்திப்பு என்பதால் பிரிண்ட் மீடியாக்கள், விஷூவல் மீடியாக்கள் அனைவரும் மாலை 5 மணி அளவில் கமிஷனர் அலுவகத்தில் கூடினர்.
அப்போது திடீரென கமிஷனர் ஜார்ஜ், ’’எனக்கு முன்னால் எந்த மைக்கையும் வைக்காதீர்கள்’’ என்று அறிவித்தார்.  அப்போது ஜெயா தொலைக்காட்சி நிருபர், ’’சார், எங்க மைக் கூடவா?’’ என்று கேட்டார்.
அப்போது அருகில் இருந்த மற்ற காவல் அதிகாரிகள்,  ’’கமிஷனருக்கு மைக், கேமிரா என்றால் அலர்ஜி’’ என்று விளக்கம் அளித்தனர்.  இதனால் வீடியோ மேன்களும், கேமராமேன்களும் வேறு வழியின்றி வெளியேற்றப்பட்டனர்.  செய்தியாளர்களும் கமிஷனரும் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்யக்கூடிய ஒரு சூழல் இதனால் ஏற்பட்டது.
இருப்பினும் செய்தியாளர்கள் பெருந்தன்மையோடு,  ‘’ சார், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யுங்க’’ என்று கமிஷனரிடம் கேட்க,  அதற்கு அவர், ‘’ எனக்கு எந்த பப்ளிசிட்டியும் நீங்கள் தரவேண்டாம்’’ என்று காட்டமாக பதிலளித்தார்.
இதனால் ஜெயா டிவியின் நிருபர் தலைமையில் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் வெளிநடப்பு செய்தனர்.   
அம்மாவின் நம்பிக்கையை பெற இப்படியெல்லாம் நல்ல பிள்ளை வேஷம் போட  வேண்டி இருக்கிறது 

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இப்படி நிருபர்கள் பேட்டி நேரத்தின் போது புறக்கணிக்கப்பட்டதும், வெளிநடப்பு செய்ததும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போலீஸ் - பிரஸ் மோதல் என்கிற புதிய கலாச்சாரம் தொடங்கியிருக்கிறது.
- சேது

கருத்துகள் இல்லை: