திங்கள், 8 அக்டோபர், 2012

Hariyana பெண்கள் எண்ணிக்கை குறைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிப்பு

அரியானா மாநிலத்தில், ஒரே மாதத்தில், 10 இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Sex-Selective Abortion as gender discriminationGender biases appear throughout the life cycle of women in India. The still-declining child sex-ratio is a clear indicator of the selective elimination of female foetuses. Its causes can be traced to a complex nexus of patriarchal ideas, misuse of medical technology and the greed of unscrupulous medical practitioners. Specifically, the female-male ratio of the population in 0-6 age group has declined from 945 girls per 1000 boys in 1991 to 927 girls per 1000 boys in 2001, and to just 914 girls per 1000 boys in 2011. The fall, which in 2001 was more pronounced in richer northern India states such as Haryana, Punjab, Delhi, Maharashtra & Gujarat, has now spread to all parts of India, including rural areas.

இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள், அதிக அளவில் நடப்பதற்கு, அரியானாவில், ஆண்களை விட, பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம்' என, "அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம்' புகார் தெரிவித்துள்ளது.
 அவமானம்:
அரியானாவில், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான, காங்கிரஸ் அரசு உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள, ஜிந்த் மாவட்டம், சச்சா கேடா கிராமத்தில், கடந்த சனியன்று, 16 வயது தலித் பெண் ஒருவர், அவரின் அண்டை வீட்டில் வசித்த ஒருவராலும், மற்றொருவராலும் கற்பழிக்கப்பட்டார்.இதையடுத்து, அந்தப் பெண் தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இதேபோல், கடந்த மாதமும், இம்மாநிலத்தில் உள்ள ஹிசார் மாவட்டத்தில், தலித் பெண் ஒருவர், 12 பேரால், கற்பழிக்கப்பட்டார்.அவர் பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள், மொபைல் போனில் படம் பிடிக்கப்பட்டு, எம்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டன. அதனால், அவமானம் அடைந்த அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.கடந்த, சனிக்கிழமை, 16 வயது, தலித் பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, அரியானா மாநிலத்தில், ஒரே மாதத்தில் நடந்த, 10வது கற்பழிப்பு சம்பவமாகும்.

இந்த, 10 சம்பவங்களில், பெரும்பாலானவை, ஜிந்த் மாவட்டத்திலேயே நடந்துஉள்ளன.கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து விசாரிக்க, அரியானா மாநில அரசு, மூன்று பேர் குழுவை நியமித்திருந்தாலும், கற்பழிப்புகள் குறைந்தபாடில்லை. ஆனால், "கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குறைவான அளவிலேயே, கற்பழிப்புகள் நிகழ்ந்துள்ளன' என்று, மாநில போலீஸ் டி.ஜி.பி., ரஞ்ஜீன் தலால் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தின் துணைத் தலைவர், ஜக்மதி சங்வான் கூறியதாவது:அரியானாவில், சமீபத்திய மாதங்களில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதற்கு, மாநிலத்தில், ஆண்களை விட, பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம்.


பாதுகாப்பற்ற சூழ்நிலை :
இளைஞர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது, பெரும் பிரச்னையாக உள்ளது. இதுபோன்ற நிலைமையால், பெண்களுக்கு பாதுகாப்பாற்ற சூழ்நிலை உருவாகிஉள்ளது.கடந்த, 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அரியானாவில், 1,000 ஆண்களுக்கு, 830 பெண்கள் மட்டுமே உள்ளனர்.இவ்வாறு ஜக்மதி சங்வான் கூறினார்.


திருமண வயதை குறைக்க யோசனை
"அரியானாவில், பெண்கள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் குறைய வேண்டும் எனில், பெண்களின் திருமண வயதை, 16 ஆக குறைக்க வேண்டும்' என, அரியானா மாநில கிராம பஞ்சாயத்துகளின் உறுப்பினர்கள் பலர் கூறியுள்ளனர்.


அவர்கள் மேலும் கூறியதாவது:
கற்பழிப்புகள், அதிக அளவில் நடப்பதற்கு, தொலைக்காட்சிகளும், திரைப்படங்களுமே காரணம். இவைதான், இளைஞர்களை, மோசமான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை, 16 ஆக குறைக்க வேண்டும். இதனால், ஆண்கள் செக்ஸ் தேவைக்காக, வேறு வழிகளைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் கற்பழிக்கப்படுவதும் குறைந்து விடும்.இவ்வாறு, கிராம பஞ்சாயத்துக்களின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: