வியாழன், 11 அக்டோபர், 2012

DMK:சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு கூடாது

 தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை:மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, ஏற்கனவே மத்திய அமைச்சரவையில், தி.மு.க., சார்பில் இடம் பெற்றுள்ளவர்களைத் தவிர, மேலும், கட்சியின் சார்பில், புதியதாக அமைச்சரவையில் இடம் கோருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது, கட்சியின் கொள்கை நிலைப்பாடு என கூறியுள்ளார்.

கருணாநிதி, ஸ்டாலின் மனு தள்ளிவைப்பு:
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கேள்வி-பதில், பொருளாளர் ஸ்டாலின் பேச்சால், இருவருக்கும் எதிராக, சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், அரசு சார்பில், அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. செய்தி வெளியிட்ட, "முரசொலி' பத்திரிகையின் ஆசிரியர் செல்வத்துக்கு, எதிராகவும், வழக்குகள் தொடரப்பட்டன.கோத்தகிரியில் ஒரு குடம் தண்ணீர், 5 ரூபாய், கொடநாட்டில், முதல்வர் தங்கியிருப்பது, தொடர்பாக, முரசொலியில், கருணாநிதி எழுதிய செய்திக்காக, இந்த அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்குகளில், கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி, கருணாநிதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:வழக்கு விசாரணையின் போது, ஒவ்வொரு முறையும், கோர்ட்டில் ஆஜராவது, கடினம். கட்சிப் பணிகள் காரணமாக, மாவட்டம் தோறும், செல்ல வேண்டியதிருக்கும். கட்சியினரின் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைக்கும்படி, தொடர்ந்து அழைப்பு வருகிறது.வெளியிடங்களுக்கு, கட்சியின் மற்ற தலைவர்களுடன் செல்கிறேன். டாக்டரின் அறிவுரை இருந்தாலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். எனவே, கோர்ட்டில் ஆஜராக, விலக்கு அளிக்க வேண்டும். என் வழக்கறிஞர் மூலம் ஆஜராக, அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, இரண்டு வழக்குகளில் ஆஜராக, விலக்கு அளிக்கக் கோரி, ஸ்டாலினும், மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.இம்மனுக்கள், நீதிபதி கலையரசன், முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, டிசம்பர், 18ம் தேதிக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

கருத்துகள் இல்லை: