புதன், 10 அக்டோபர், 2012

துரை தயாநிதி: அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?”

துரை தயாநிதி, போலீஸூடன் ஒத்துழைக்க தயார்” புதிய மனுவில் ‘ஏதோ’ உள்ளது!

Viruvirupu
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீண்டும் ஒரு தடவை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். துரை தயாநிதியின் மனைவி உட்பட அவருடன் தொடர்புடையவர்களை ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைத்துவரும் நிலையில், இந்த இரண்டாவது முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்ஜாமீன் கிடைத்தால், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார் துரை தயாநிதி.

கிரனைட் குவாரி முறைகேடு வழக்கில் துரை தயாநிதி உள்பட பலர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனுக்கள், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கடந்த 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், துரை தயாநிதி மீண்டும் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதால், இதில் ‘ஏதோ’ ஒரு விஷயம் உள்ளதாக ஊகிக்கப்படுகிறது.
இம்முறை தாக்கல் செய்துள்ள அவரது முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, போலீஸ் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால், ‘ஏதோ’ விஷயம், என்ன விஷயம் என்று தெரிந்துவிடும்.
துரை தயாநிதி புதிதாக தாக்கல் செய்துள்ள மனுவில், “நான் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறேன். அதில் கிரனைட் தொழிலிலும் முன்பு ஈடுபட்டிருந்தேன். ஆனால், அதில் முறைகேடுகள் செய்ததாக உரிய ஆதாரமின்றி என்னை கைது செய்ய போலீசார் முயற்சிக்கின்றனர். ஒலிம்பஸ் நிறுவனத்தில் யாராவது தவறு செய்திருந்தால், அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?” என்று தெரிவித்துள்ளார்.
இம்மனு விசாரணைக்கு வரும்போது துரை தயாநிதி தரப்பு வக்கீல், “ஒலிம்பஸ் நிறுவனம்மீது போலீஸ் பதிவு செய்துள்ள புகார்களில், துரை தயாநிதியை தொடர்புபடுத்த போலீஸிடம் ஆதாரங்கள் உள்ளனவா?” என்ற சந்தேகத்தை கிளப்புவார் என ஊகிக்கலாம்.
எப்படியோ, இந்த இரண்டாவது முன்ஜாமீன மனு, இந்த விவகாரம் ஏதோ ஒரு முடிவை நெருங்குகிறது என்பதை காட்டுகிறது.

கருத்துகள் இல்லை: