சனி, 13 அக்டோபர், 2012

.துருக்கி போர் விமானங்கள் சிரியாமீது தாக்குதல் ஆரம்பம் ?

துருக்கி, முதல் தடவையாக தமது போர் விமானங்கள் இன்று மாலை எல்லை நோக்கி கிளம்பி விட்டன! இன்றிரவு தாக்கலாம்!! துருக்கி, முதல் தடவையாக தமது போர் விமானங்களை சிரியா நாட்டு எல்லையை தாக்குவதற்காக இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் உச்சக்கட்டத்தை அடைந்ததையே இது காட்டுகிறது. துருக்கி போர் விமானங்கள், சிரியா நாட்டு எல்லையில் உள்ள ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடந்தலாம் என ஊகிக்கப்படுகிறது.
துருக்கி-சிரியா எல்லையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள துருக்கி நகரம் அஸ்மாரின் மீது நேற்று மாலை சிரியா நாட்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தின. சிரியா ஹெலிகாப்டர்கள் துருக்கி எல்லைக்கு உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்பதற்கே, துருக்கி விமானப்படை விமானங்கள் இன்று அனுப்பப்பட்டன என்று துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் புறப்பட்டுச் சென்ற துருக்கி விமானங்கள் எந்த தாக்குதலிலும் ஈடுபடாமல் திரும்பி வந்துள்ளன. ஆனால், அவை சிரியா நாட்டு எல்லைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, சிரியா ராணுவத் தளங்கள் மீது வட்டமடித்துவிட்டு திரும்பின.
சிரியா ராணுவத்திடம் விமான எதிர்ப்பு பீரங்கிகள் இருந்த போதிலும், அவர்களும் இந்த விமானங்களை சுடவில்லை.
இந்த ஆபரேஷன் ஒரு ஆழம் பார்க்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது. இன்றிரவு சிரியா நாட்டு ராணுவத்தளங்கள் மீது துருக்கி விமானங்கள் தாக்கக்கூடும் என அங்காரா டி.வி. சேனல்கள் தற்போது பிளாஷ் நியூஸ் போட்ட வண்ணம் உள்ளன. அது மாத்திரம் நிஜமாக நடந்துவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி யுத்தம் நடப்பதை தவிர்ப்பது கடினமாகி விடும்

கருத்துகள் இல்லை: