

ஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்து பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ் இதன்பின்னர் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர். கடந்த 1977-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு ஜனவரி 27-ம் ஆண்டு முதன்முதலாக ஐ-பேடினை அறிமுகம் செய்து நவீன கணினி உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.
பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மரணமடைந்தார். அவரது உலகெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவருடைய நினைவுநாளில் ஜாப்ஸின் கண்டுபிடிப்புகளைப் பற்றி நினைவு கூர்ந்தார் ஜான் அபெல். ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கி வியக்கத்தக்க வகையிலான கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்துச்சென்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்றார் அபெல்.
ஐபோன், ஐபாட் போன்றவை ஜாப்ஸின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு அவர் விட்டுச்சென்ற வழியில் ஆப்பிள் நிறுவனத்தை வலிவுடையதாக மாற்றியிருக்கிறார் நிறுவனத்தின் தற்போதைய சி.இ.ஒ டிம் குக். ஸ்டீவ் தனது கண்டுபிடிப்புகளை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விட்டுச்சென்றிருக்கிறார். இது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று டீவ் ஜாப்ஸ் பற்றி அவரது நினைவுநாளில் நினைவு கூர்கின்றனர் நிறுவன ஊழியர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக