வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஞானவேல் ராஜாவுடன் கூட்டணி சேரும் வெங்கட்பிரபு...

Studio green signs venkat prabhu
மங்காத்தா படத்தை தொடர்ந்து டைரக்டர் வெங்கட்பிரபு அடுத்து, க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் பருத்திவீரன், நான் மகான் அல்ல, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் கே.இ.ஞானவேல் ராஜா. இதுதவிர விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார். நடிகர் கார்த்தியின் நெருங்கிய உறவினரான இவர்,
அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக கூறப்படுகிறது. இதனை ஞானவேல் ராஜாவும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் அடுத்த படத்தை தயாரிப்பது வெங்கட்பிரபு தான். ஆனால் இதில் யார், யார் நடிக்க போகிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் படத்திற்கான நாயகன், நாயகியோடு படத்தை பற்றிய தகவல்களை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அஜித்தின் மங்காத்தா படத்தை ஞானவேல் ராஜா தான் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் சிலபல பிரச்சனைகளால் அது வேறு ஒரு நிறுவனத்திற்கு கைமாறியது. அப்போதே வெங்கட்பிரபுவும், ஞானவேல் ராஜாவும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று முடிவெடுத்ததாகவும், அதன்படி இப்போது இருவரும் சேர்ந்து படம் பண்ணுவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை: