செவ்வாய், 4 அக்டோபர், 2011

சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரசார் சிறை வைப்பு!





காரைக்குடியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் சார்லஸ் ஜான் கென்னடி, காளிதாஸ், வினோத், கணேஷ் ராஜ், பஷீர் ஆகிய 5 பேர் 02.10.2011 அன்று இரவு முதல் சென்னை சத்தியமூர்த்தி பவன் வாசலில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை < சார்லஸ் ஜான் கென்னடி கூறுகையில், காரைக்குடியில் 36 வார்டு இருக்கிறது. அதில் 27 வார்டு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால் சீட் கொடுக்கவில்லை. இன்று (03.10.2011) மாலை 3 மணிக்குள் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், இந்த உண்ணாவிரதம் தொடர்ந்து நீடிக்கும். சிவகங்கை மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உதவியாளர் என்.சுந்தரம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அங்கு நடக்கும் விஷயங்கள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. அப்படி அவருக்கு தெரிந்திருந்தால், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அவரையும் எதிர்க்கிறோம். கார்த்தி ப.சிதம்பரம் ஒரு விழாவில் பேசியபோது, திமுகவுக்கு தான் முழு ஆதவு என்றுக் கூட பேசினார். ஆக காங்கிரஸ் கட்சிக்கு அனைவரும் துரோகம் இழைக்கின்றனர். இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அனைவரையும் சேர்த்து தான் எதிர்க்கிறோம். தனிப்பட்ட முறையில் ப.சிதம்பரம் மீது எந்தக் கோபமும் கிடையாது என்றார். சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்தவர்களை, செல்வபெருந்தகை ஆதரவாளர்கள், உண்ணாவிரதத்தை கலைத்து அவர்களை இழுத்துக்கொண்டு போய் ஒரு அறையில் அடைத்து பூட்டினர். அவர்களை சந்திக்க சென்ற செய்தியாளர்களையும் தடுத்தனர். இதுபற்றி செல்வபெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்களது உரிமையை கேட்பதை நாங்கள் தலையிடவில்லை. ஆனால், இதில் உள்துறை அமைச்சரை ஏன் அவர்கள் இழுக்க வேண்டும் என்றுதான் விபரம் கேட்டோம். அதற்கு அவர்கள் தலைவர் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சொன்னார்கள். அவ்வளவு தான் நடந்தது. வேறு எதுவும் பிரச்சனை இல்லை என்றார். அடுத்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அங்கிருந்த செல்வபெருந்தகை ஆதரவாளர்களிடம், நடந்தவைகள் பற்றி விசாரித்தார். பின்னர் உண்ணாவிரதம் இருந்தவர்களையும் அழைத்து சமாதானப்படுத்தினார். நடந்தவை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு படிவங்கள் இல்லை என்று அவர்கள் சொல்லுகிறார்கள். தலைவர் வந்தால் தான் இதுபற்றி முடிவு தெரியும். ப.சிதம்பரம் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர். அவர் மாவட்டத்திற்குள் வருவது அரிது. அவருக்கும் இந்தப் பிரச்சனைக்கும் தொடர்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எதையும் நேரடியாக விசாரித்தால் தான் உண்மை தெரியும் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

கருத்துகள் இல்லை: