சனி, 8 அக்டோபர், 2011

துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாராதலக்ஷமன் பிரேமச்சந்திர உட்டப மூவர் பலி!


முல்லேரியா பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.இச்சம்பவத்தில் தலையில் பலத்த காயத்துக்குள்ளான கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான துமிந்த சில்வா தற்போது சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிக்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த ஐவரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, தற்போது அங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்த இன்று மாலை 3.30 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற இடத்தில் வாகனமொன்றுக்குத் தீவைக்கப்பட்டுள்ளது...

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பெரேரா கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பாளருமான துமிந்த சில்வா படுகாயமடைந்துள்ளார்.

துமிந்த சில்வாவின் தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பெரேராவின் முன்னாள் மெய்ப்பாதுகாவரும் உயிரிழந்துள்ளார்.நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு முல்லேரியா கொட்டிக்காவத்த பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பத்து பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பாரத லக்ஷ்மன் பெரேரா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல்சம்பவம் குறித்து காவல்துறையினர் எவ்வித தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.

கொலன்னாவை தேர்தல் தொகுதியின் முன்னாள் அமைப்பாளராக பாரத லக்ஷ்மன் பெரோ கடமையாற்றிய அதேவேளை, தற்போதைய தொகுதி அமைப்பாளராக துமிந்த சில்வா கடமையாற்றி வருகின்றார்.
முல்லேரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது!முல்லேரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4.30 முதல் நாளை காலை 6 மணி இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்தப் பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: