புதன், 5 அக்டோபர், 2011

புலிகள் நெதர்லாந்தில் 21 Brain washing பாடசாலைளை நடத்தி

நெதர்லாந்தில் புலிகள் வார இறுதி பாடசாலைகள் 21ஐ நடத்தி வருகின்றனர் என கொழும்பு ஊடகங்கள்!

நெதர்லாந்தில்,புலிகள் 21 வார இறுதி பாடசாலைளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெதர்லாந்து காவல்துறையினரால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் அநேகமான பாடசாலைகள் தனி நபர்களிடமும் மற்றும் சில சங்கங்களிடம் ருந்தும் பறிதெடுத்தவையாகும் கோவில்களையும் புலி குண்டர்கள் பறித்தெடுத்த வரலாறுகள் பல உண்டு.
அம்ஸ்டடம், ரொட்டர்டம், தி ஹேக், பிரடா, இன்ட்டோவன், ஏர்னம் மற்றும் லியூ மற்றும் ஒஸ்டன்ஸ்பெலி ஆகிய நகரங்களில் இந்தப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன.தமிழ் மொழி, நாடகம் மற்றும் அரங்கவியல் போன்ற பாடங்கள் பாடசாலைகளில் போதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமைகளில் இந்தப் பாடசாலை நடத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறெனினும், தமிழ் இனத்தை போற்றும் வகையிலும், ஆயுத போராட்டம் மற்றும் யுத்த களத்தில் தமிழர்களின் பண்பு போன்ற இந்தப் பாடசாலைகளில் போதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளிலும் இவ்வாறான பாடசாலைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவை புலி ஆதரவு அமைப்புக்களினால் நடத்தப்படுவதில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை: