செவ்வாய், 4 அக்டோபர், 2011

மதுவிருந்து நடிகர் நடிகைகள் ஆட்டம் சத்தம் தாளாமல் போலிஸ் வருகை



தீபிகா படுகோனே வீட்டில் மது விருந்து: அரை குறை ஆடையில் நடிகைகள் ஆட்டம்: போலீஸ் புகுந்ததால் பரபரப்பு

இந்தி படவுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவர் தீபிகா படுகோனே. இவர் மும்பை பிரபாதேவி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 26வது தளத்தில் வீடு வாங்கி இருக்கிறார். இதன் கிரகப்பிரவேசத்தையொட்டி பாலிவுட் பிரபலங்களுக்கு கடந்த சனிக்கிழமை இரவு பிரமாண்ட மது விருந்து ஒன்று அளித்தார்.

இந்த விருந்தில் அமிதாப்பச்சன், பிரியங்கா சோப்ரா, இம்ரான்கான், கரண் ஜோகர், சகீத் கபூர், அனுஷ்கா சர்மா, ரன்வீர் சிங், ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா, தீபிகாவின் காதலுக்குரிய தொழில் அதிபர் சித்தார்த் மல்லையா, அவரது தந்தை விஜய் மல்லையா என பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நள்ளிரவை தாண்டி நடந்த விருந்தில், காதைப் பிளக்கும் ஒலியில் பாடல்கள் இசைக்கப்பட்டன. அதிகாலை 3 மணி வரை உயர் ரக மது பரிமாறப்பட்டது. ஆட்டம், பாட்டம் என விருந்து களை கட்டியது. இதனால் அக்கம்பக்கதாரின் தூக்கம் பறிபோனது.
இது தொடர்பாக போலீசாருக்கும் புகார் சென்றதாக தெரிகிறது. அதிகாலை 3.15 மணிக்கு போலீஸ் ரோந்து வேன் ஒன்று அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதிலிருந்து இறங்கிய ஒரு போலீஸ் அதிகாரி நேராக தீபிகாவின் வீட்டினுள் சென்றார். அக்கம்பக்கத்தாருக்கு எந்த விதமான தொந்தரவும் தராமல் விருந்தினை நடத்துங்கள் என்று தீபிகாவுக்கு அவர் அறிவுரை கூறிச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.
அதன் பின்னர் மற்றொரு வேனில் சாதாரண உடை அணிந்த போலீசார் வந்து திபுதிபுவென இறங்கினர். மறுபடியும் அங்கு பரபரப்பு தொற்றியது. அவர்களும் தீபிகாவின் வீட்டுக்கு சென்று எச்சரித்து சென்றதாக தெரிகிறது. என்ன வேடிக்கை என்றால், இரண்டு வேன்களில் வந்த போலீசாருமே முன் பக்க கேட்டின் அருகே பத்திரிகையாளர்கள் இருந்ததால் கேள்விகள் எழுப்பக்கூடும் என்பதற்காக பின்புற வாசல்வழியே வெளியேறி விட்டனர்.
அதன்பின்னர் விருந்திலிருந்து நடிகர் இம்ரான்கான், அவரது மனைவி அவந்திகா, விஜய் மல்லையா, அபய் தியோல், பிரீத்தி தேசாய் போன்றோர் வெளியேறினர்.
இது தொடர்பாக தாதர் போலீஸ் நிலையத்தில் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, "அங்கு ஏராளமானோர் கூடியிருந்ததாக தகவல் கிடைத்தது. அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் எங்கள் போலீஸ் படை சென்றது. மற்றபடி வேறொன்றுமில்லை'' என்று அவர் முடித்துக்கொண்டார்.
தீபிகா படுகோனே அளித்த விருந்தில் பங்கேற்ற மூத்த கலைஞர் தான்தான் என அமிதாப்பச்சன் சமூக இணைய தளம் ஒன்றில் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: