வியாழன், 6 அக்டோபர், 2011

விஷம் கக்கும் யாழ். உதயன்,சப்றா’சரவணபவன் MP TNA

bias journalismsஊடக தர்மத்தை காலில் போட்டு மிதிக்கும் யாழ். உதயன் விஷம் கக்கும் 
- திருநீலகண்டன் - கனடா
இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லையென்ற பிரச்சாரம் கடந்த பல வருடங்களாக உலகளாவிய ரீதியில் செய்யப்பட்டு வருகிறது. அதைச் செய்பவர்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகையும் ஒன்று. ஆனால் இந்த உதயன் பத்திரிகையில் வெளிவரும் செய்திகளைப் பார்த்தால், இலங்கையில் தாராளமான ஊடக சுதந்திரம் இருக்கிறது என்பது நிரூபணமாவது மட்டுமின்றி, ஊடக சுதந்திரத்தின் பெயரால் என்னவிதமான கயமைத்தனங்களை அங்கு செய்யலாம் என்பதும் தெரிய வரும். உண்மையில் ஊடக சுதந்திரத்தை பல்வேறு நாசகார நோக்கங்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதில் ஒருவர் பயிற்சி பெற வேண்டுமானால், அதை உதயனிடமிருந்துதான் கற்றுக் கொள்ள முடியும்.
உதாரணத்துக்கு இதோ சில..
‘மகிந்த அரசு இனப்பிரச்சினையைத் தீர்க்காது’ என கொட்டை எழுத்தில் ஒரு நாள் தலைப்புச் செய்தி வரும். அடுத்த நாள் ‘அரசு - கூட்டமைப்பு பேச்சில் முன்னேற்றம் - அரசு கூறுகிறது’ என்று ஒரு செய்தி தவிர்க்க முடியாமல் எங்காவது ஒரு மூலைக்குள் போடப்பட்டிருக்கும். அதற்கடுத்த நாள் ‘இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் ஒருபோதும் விட மாட்டோம் - சிரேஸ்ட அமைச்சர் தெரிவிப்பு’ என ஒரு தலைப்புச் செய்தி வரும். ஆனால் அந்த சிரேஸ்ட அமைச்சர் யார் என்ற பெயர் இருக்காது.
‘ஐ.நா. கூட்டத்துக்குச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியூயோர்க்கில் சிறை பிடிப்பு – ஆங்கிலப் பத்திரிகை தகவல்’ என்று இன்னொரு செய்தி வரும். ஆனால் அந்த ஆங்கிலப் பத்திரிகை எதுவென்று விபரம் இருக்காது.
‘இந்திய - இலங்கை கடற்படைகளின் கடற்படைப் பயிற்சி திடீரென ஒத்தி வைப்பு! - இராமதாசின் எதிர்ப்பால் இந்திய அரசு பின்வாங்கியதாகத் தகவல்’ என மற்றுமொரு செய்தி வரும். ‘அட இராமதாஸ், வை.கோ போன்றவாகள்  எதிர்ப்பார்கள் என்று தெரிந்து கொண்டுதானே பயிற்சிக்குப் போனாங்கள். பிறகு ஏன் அவங்களுக்குப் பயந்து இடையில் பின்வாங்கல்?’ என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்ல உதயனில் ஆள் இருக்காது.
இதுதவிர
‘மாவை சேனாதிராசா ஆவேசம்’
‘சுரேஸ் பிரேமச்சந்திரன் சவால்’
‘அரியநேத்திரன் காட்டம்’
‘சிறீதரன் சீற்றம்’
‘சரவணபவன் கேள்வி’ என அப்பாவித் தமிழ் மக்களை உசுப்பேத்த பல போஸ்டர் தலைப்புச் செய்திகளும் முன்பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் ஆவேசமாகப் பிரசுரமாகும்.
இததவிர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘புகழ்’ பாடுவதற்கென்றே இலவசமாக தினமும் சில பத்திகள் ஒதுக்கப்படுகின்றன.
அரச எதிர்ப்பு, ஐ.தே.க ஆதரவு, தமிழ் இனவெறியூட்டுவது, பொய் புரளிகளைக் கிளப்பி விடுவது என, அந்தப் பத்திரிகை யாழ்ப்பாண மக்களின் தலையில் சம்பல் அரைத்து வருவதைப் பார்க்க, உண்மையான தமிழனுக்கு வயிறு பற்றியெரியாமல் இருக்காது.
இவ்வளவுக்கும் இந்தப் பத்திரிகையின் முதலாளி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அவரை வைத்தும் கூட்டமைப்பை ஒருவர் விளங்கிக் கொள்ள முடியும்.
இந்தப் பத்திரிகையின் முதலாளி, பல வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ‘சப்றா’ என்ற பெயரில் நடைபெற்ற நிதி நிறுவனம் ஒன்றின் முக்கியமான நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தில் பல தமிழ் குடும்பங்கள் தமது எதிர்காலத் தேவைக்காக வைப்பிலிட்டிருந்த பணத்தை, அதன் நிர்வாகிகள் ஏப்பமிட்டதால், பலர் தற்கொலை கூட செய்து கொண்டனர். அந்த மோசடி சம்பந்தமாக ‘இன்டர்போல்’ வரையும் முறைப்பர்டுகளும் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனது கோடைகால விடுமுறையை சந்தோசமாக யாழ்ப்பாணத்தில் கழிக்கச் சென்றபோது, அங்கு இந்த ‘உதயன்’ அடிக்கும் இந்தக் கொட்டத்தைக் கண்டு, மனவெறுப்போடும் அங்குள்ள மக்கள் மீதான அனுதாபத்தோடும் கனடா திரும்பினேன்.
நன்றி: வானவில் - 9

கருத்துகள் இல்லை: