வியாழன், 6 அக்டோபர், 2011

தி.நகரில் ஆட்டோ செல்ல தடை!தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து போலீசார்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தி.நகரில் வரும் 8ம் தேதி முதல் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி போக்குவரத்து போலீசார் விடுத்துள்ள அறிக்கை: தீபாவளியை முன்னிட்டு தி.நகர், சவுந்தர பாண்டியனார் அங்காடி பகுதியில் வரும் 8ம் தேதி காலை 8 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. பனகல் மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக செயல்பட உள்ளது. வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து மேட்லி சந்திப்பை நோக்கி செல்லலாம்.கீழ்க்கண்ட பகுதியில் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெங்கட்நாராயணன் சாலை மற்றும் நாகேஸ்வரராவ் சாலை சந்திப்பில் இருந்து துரைசாமி சாலை நோக்கி செல்ல தடை. பிருந்தாவன் சந்திப்பில் இருந்து பனகல் பூங்கா வழியாகவும் முத்துரங்கன் சாலை சந்திப்பில் இருந்து மேட்லி சந்திப்பு வழியாகவும் செல்ல தடை.

கண்ணம்மாபேட்டை சந்திப்பில் இருந்து மேட்லி சந்திப்பை நோக்கி செல்லவும் பர்கிட் சாலை தண்டபாணி சாலை சந்திப்பில் இருந்து மேட்லி சந்திப்பை நோக்கி செல்லவும் அனுமதி இல்லை. கோட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்கா நோக்கி செல்ல கூடாது. தி.நகர் பகுதிக்குள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சரக்கு வாகனங்கள் வர அனுமதி மறுக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: