திங்கள், 9 மே, 2011

யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் கைது,உடமைகளுக்கு தேசம் விளைவித்தனர்


யாழ்.பல்கலைக்கழகத்தின் உடமைகளுக்கு தேசம் விளைவித்தனர் என சந்தேகிக்கப்படும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை யாழ்.பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் அதிகாரி விக்கிரமபாகு ஆராட்சி தெரிவித்துள்ளார்.

புதுமுக மாணவர்களை வரவேற்பதற்கான ஆரம்ப வேலைகளில் முகாமைத்துவ பீட மாணவர்கள் ஈடுபட்டிருந்த சமயம் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் மோதலின் போது பல்கலைக்கழகத்தின் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டிருந்தது. மீண்டும் மோதல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்புக்காக பொலிஸார் பல்கலைக்கழகத்துக்குள் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது பல்கலைக்கழக வளாகத்தினுள் நின்ற மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.

இன்று கைது செய்யப்பட்ட மாணவர்களை நாளை நீதிமனறில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் அதிகாரி விக்கிரமபாகு ஆராட்சி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: