ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுறுவுவதற்காக நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் எல்லைப் பகுதியில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், பல்வேறு இடங்களில் பதுங்கியிருப்பதாகவும், ஊடுறுவ தக்க சமயத்துக்காக காத்திருப்பதாகவும் உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 100 இடங்களில் இவர்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பல்வேறு வகையான தீவரவாத பயிற்சிகளைப் பெற்று இந்தியாவில் புகுந்து நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் ஊடுறுவலைத் தடுக்குமாறு பலமுறை பாகிஸ்தானிடம் நமது அதிகாரிகள் கூறி வந்தபோதிலும் அதை பாகிஸ்தான் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. மேலும் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு பாகிஸ்தான் ராணுவமே உதவி வருகிறது என்பதுதான் வேதனையான விஷயம்.
தற்போது பின்லேடன் விவகாரத்தால் பாகிஸ்தான் ராணுவம், அரசு மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவை மீது அந்த நாட்டு மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். அவர்களை திசை திருப்ப இந்தியாவில் தீவிரவாதிகள் மூலம் நாச வேலைகளை பாகிஸ்தான் தூண்டி விடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் ஊடுறுவக் காத்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், உள்துறை அமைச்சகம் அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

English summary
At least 700 militants are being trained at various terror camps across the LoC with over 100 waiting at "launch pads" to infiltrate into Jammu and Kashmir, officials said. Intelligence inputs suggested that about 700 to 800 militants are holed up in different camps across the Line of Control and getting terror training, Home Ministry officials said. "Despite our repeated complaints to Pakistan, the terror infrastructure continues to exist across the border and hundreds of terrorists are getting training there. Over 100 are waiting at launch pads to enter Jammu and Kashmir at any time," an official said. The intelligence inputs also suggested that authorities in Pakistan may try to push more terrorists, belonging to Lashkar-e-Taiba and Hizbul Mujahideen, into Kashmir in an attempt to divert attention from itself following the killing of Osama bin Laden.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக