ஞாயிறு, 8 மே, 2011

பின்லேடனின் ஐந்தாவது மனைவியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு!


பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த வீட்டில் அவர் மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கமாண்டோ படையினரின் எதிபாராத திடீர் தாக்குதலில் பின்லேடன், அவர் மகன் காலித், ஒரு பெண், மற்றும் இரு உதவியாளர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பின்லேடனின் ஐந்தாவது மனைவி அமய் உயிருடன் பிடிபட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்ட சமயத்தில் அமய் மீது குண்டுகள் பாய்ந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. பின்லேடனின் மனைவி அமய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாகிஸ்தான் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அமய் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராவல்பிண்டி மருத்துவமனையில் இருக்கும் அவரிடம், பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினர் பற்றிய தகவல்களை பெறுவதற்காக, விசாரணை நடத்த அமெரிக்கா விரும்புகிறது. அதனால், அமெரிக்காவிடம் அமய்யை ஒப்படைக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளது. அந்த கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது

கருத்துகள் இல்லை: