சென்னை : பிளஸ்டூவில் 1191 மதிப்பெண்கள் பெற்ற சென்னை குரோம்பேட்டை மாணவி சந்தியாதான் தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்றவராவார். ஆனால் அவர் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் ரேங்கிங் கிடைக்காமல் போய் விட்டது.
தமிழக அளவில் ஓசூர் மாணவி கே.ரேகாதான் முதலிடம் பிடித்தவராக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆனால் சென்னை குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எஸ். மாணவி சந்தியா 1191 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். இருப்பினும் இவர் தமிழை முதல் பாடமாக எடுக்கவில்லை, சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்திருந்தார். இதனால் இவருக்கு மாநில அளவிலான ரேங்கிங் கிடைக்கவில்லை.
தமிழை முதல் பாடமாக எடுத்து அதிக மதிப்பெண் பெற்றால்தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழை முதல் பாடமாக சந்தியா எடுக்காததால் அவருக்கு முதலிடம் நழுவிப் போயுள்ளது.
அதே போன்று பிரஞ்சு மொழியை எடுத்து படித்தவர்களில் வித்யோதயா மாணவி ஜெயப்பிரதா 1190 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
3வது இடத்தை பிரெஞ்சு மொழியை முதல் பாடமாக எடுத்துப் படித்தவரான சென்னை அருகே உள்ள கீழ்க்கட்டளையைச் சேர்ந்த எச்.எப்.சி பள்ளி மாணவி மகாலட்சுமி பிடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 1189 ஆகும்.

English summary
Chennai girl Sandhya from Chromepet has scored 1191 out of 1200 marks. But she could not get the first rank because she has not taken Tamil as first language. Hosur girl K.Rekha has secured the first place with 1190 marks.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக