புதன், 11 மே, 2011

அமுல்படுத்துவேன்-தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

புலிகளுக்கு வேண்டியவற்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்தத் தரப்பினரோ என்னிடம் கோரிக்கையாக முன்வைத்தால் நான் அந்தக் கோரிக்கைகளை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பேன். ஆயினும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நான் அவதானமாக செவிமடுத்து அவற்றை அமுலாக்குவதற்கு முயற்சி செய்வேன்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நேற்று பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றுக் காலை அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவித்த அவர், வடக்கிலிருந்து யுத்தம் காரணமாக குடிபெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னர் அங்கு புதையுண்டுள்ள தரைக்கண்ணி வெடிகளை முற்றாக அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின்னர் நாம் வடபகுதியில் உள்ள மக்களின் புதிய வாக்காளர் இடாப்புக்களை தயாரிக்க வேண்டியிருக்கிறது.
1980ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பே இன்னும் வடபகுதியில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, புதிய வாக்காளர் இடாப்பொன்று தயாரிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இதுவரை பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்திருக்கிறோம்.
இன்னும் சில தினங்களிலும் மீண்டும் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை தொடர்வோம் என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்ற நிலையில் அரசாங்கம் இருப்பதனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் கட்சி உட்பட சகல தமிழ் கட்சிகளுடனும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றிய பேச்சுவார் த்தைகளை மேற்கொள்ளும் என்றும் அறிவித்தார்.
இந்திய-இலங்கை வலுவான உறவு
இந்தியாவிற்கும் இலங்கைக் குமிடையில் தற்போது நல்லுறவு நிலைத்திருக்கிறதா? என்று ஒரு ஆங்கில வார ஏட்டின் ஆசிரியர் கேட்ட போது, எங்கள் இரு நாடுகளுக்கிடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. எங்கள் நட்புறவு வலுவடைந்து வருகிறது என்று ஜனாதிபதி பதில் அளித்த போது,தருஸ்மன் அறிக்கை குறித்து இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை என்று இன்னுமொரு கேள்வியை எழுப்பிய போது, நிலைப் பாட்டை அறிவிக்கவில்லையென்றால் இந்தியா இலங்கையை எதிர்க்கவில்லை என்று தானே நாம் கருதவேண்டும் என்று ஜனாதிபதி பதிலளித்தார்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பது குறித்து இன்னுமொருவர் கேட்டபோது, இவை அனைத்தும் நட்புறவுடனான இராஜதந்திர விஜயங்கள் என்று கூறினார்.
ஊடகங்களுக்கு நாட்டுப்பற்று அவசியம்
இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள் இந்நாட்டு ஊடகங்கள் தருஸ்மன் அறிக்கை நாட்டில் ஒரு சர்ச்சையை கிளப்பாத வகையில், ஊடகங்கள் நாட்டுப் பற்றுடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அங்கு கருத்து தெரிவிக்கையில், நாம் தருஸ்மன் அறிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செய்யும் நற்பணிகள் குறித்து யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் செய்து வரும் மனிதாபிமான பணிகள் குறித்தும் ஆதாரபூர்வமான அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு அதன் செயலாளர் நாயகம் ஊடாக அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகளை செய்திருக்கிறோம் என்றார்.
தருஸ்மன் அறிக்கை ஒரு துவேசமான ஒருதலைப்பட்சமான அறிக்கையென்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கண்டனம் தெரிவித்த போது, ஒரு பத்திரிகை ஆசிரி யர் இவ்வறிக்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்று வினவினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பீரிஸ், நாம் இந்தியாவுடன் பேசி வருகிறோம். இந்தியா எங்களுக்கு எதிராக செயற்பட வில்லை. இந்தியா எங்களுடன் நட் புறவுடனேயே செயற்படுகிறது என்று சொன்னார்.
அப்போது குறுக்கீடு செய்த ஜனாதிபதி அவர்கள், இது ஒரு வர வேற்கத்தக்க செயல் என்று கூறினார். நாம் மற்ற உலகநாடுகளுக்கு பயங்கரவாத யுத்தத்தின் இறுதி வாரங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் உண்மை நிலையை நாம் ஆதாரபூர்வமாக சகல வெளிநாடுகளுக்கும் எங்கள் அமைச்சர்கள், வெளிநாடுகளில் உள்ள எமது தூதுவர்கள் ஊடாக வெளிப்படுத்த உள்ளோம் என்று கூறினார்.
தருஸ்மன் அறிக்கை இலங்கைக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் ஒருதலைப்பட்ச மாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் வெளிநாடுகளுக்கு எடுத்துரைப்போம் என்றும் அமைச்சர் கூறினார்.
தருஸ்மன் அறிக்கையில் தமிழ் கனேடியன் டைம்ஸ் என்ற சஞ்சிகையில் வந்த ஆதாரமற்ற இலங்கைக்கு எதிரான குற் றச்சாட்டுக்கள் முழுமையாக பிரதி எடுத்து எவ்வித மாற்றமும் இல்லாமல், சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறதென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அங்கு எடுத்துரைத்தார்.
இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னரே நாட்டில் நடைமுறைப்படுத்திய நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும் வெளிநாடுகளுக்கு எடுத்துரைத்தால் இந்த தருஸ்மன் அறிக்கை எவ்வளவு போலியானது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாம் ஏற் கனவே அரசாங்கம் மேற்கொண்டுள்ள மனிதாபிமான நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்படுவதற்கு சட்டமா அதிபர் தலைமையில் ஒரு சிரேஷ்ட தூதுக்குழுவை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏற்கனவே அனுப்பி வைத் திருக்கிறோம் என்றும் கூறினார்.
தருஸ்மன் அறிக்கை ஏற்படுத்திய சர்ச்சை தொடர்பாக ரஷ்யாவும், சீனாவும் இலங்கையை ஷிகீ(திகி!8 ஆதரிக்கின்றன. அதுபோல், மேலும் பெரும்பாலான நாடுகள் எங்களை ஆதரிக்கின்றன.
எங்களை யுத்த நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தி சிலசக்திகள் தண்டிக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு முன்னர் நாம் யுத்த குற்றங்களை இழைக்கவில்லை. இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்பதையும் இதில் எவ்வித உண்மையுமில்லை என்பதையும் முழு உலகத்திற்கும் எடுத்துக்காட்ட வேண்டும். அப்போது இந்தக் குற்றச்சாட்டுகள் வலுவிழந்து தானாகவே செயலிழந்துவிடு மென்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் வன்னிப் பிரதேசத்திலுள்ள வீடுகளிலும், எல்.ரி.ரி.ஈ. பங்கர்களிலும் அரசாங்கம் அனுப்பி வைத்த பெருந்தொகை அரிசிப் பொதி களையும், கோதுமை மா மூடைகளையும் கண்டெடுத்தோம்.
அதிலிருந்து யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அரசாங்கம் வட பகுதிக்கு உணவுப் பண் டங்களை அனுப்பவில்லை என்ற குற்றச் சாட்டு ஆதாரமற்றவை என்பதை உலக நாடுகள் உணர்ந்து கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி கூறினார்.
குற்றமிழைக்காதோரை தூக்கிலிட முடியாது
குற்றம் இழைக்காத எங்களை எந்தவொரு நீதிமன்றத்தினாலும் தூக்கிலிட முடியாது. நாம் மனித படுகொலையோ யுத்தக் குற்றங்களையோ செய்ய வில்லையென்று ஜனாதிபதி கூறினார்.
வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் சரியான எண்ணிக்கை எவர் கைவசமும் இல்லை. அங்கு எத்தனை பேர் இருக்கி றார்கள் என்பதை கண்டறிவதற்காக நாம் அடையாள அட்டைகளை அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்க எத்தணித்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், மற்றைய அமைப்புகளும் இது மனித உரிமையை மீறும் இராணுவ அடக்குமுறை என்று கண்டித்த காரணத்தினால், அம்முயற்சியை அரசாங்கம் கைவிட்டது. அதை நாம் அன்று செய்திருந்தால் இப்போது வன்னிப்பிரதேசத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எளிதில் தெரிந்துகொண்டிருக்கலாம் என்று சுட்டிக் காட்டினார்.
1981ம் ஆண்டுக்குப்பின்னர் வடபகுதியில் இருந்து எத்தனையோ பேர் வெளிநாடு களுக்கு சென்றுள்ளார்கள். அதனால், அவர்களின் எண்ணிக்கையை சரிவர செய்து கொள்ளமுடியாதிருக்கிறது.
தொடர்ந்தும் கருத்துக்களை வெளியிட்ட ஜனாதிபதி அவர்கள், பயங்கரவாத யுத் தத்தின் போது இலங்கை இராணுவத்தினர் வெளிநாட்டவர்களுடன் போரிடவில்லை.
எமது நாட்டு மக்களுடன் அவர்கள் யுத்தம் செய்தார்கள். அதனால் அவர்கள் இந்த யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறி நடக்கக் கூடாது என்பதற்கான விசேட அறிவுறுத்தல் வகுப்புகளும் இராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் தான், இந்த யுத்தத்தின் போது பொதுமக்களை இராணுவத்தினர் மரணத் திலிருந்து காப்பாற்ற முடிந்தது என்று கூறினார்.
வன்னிப்பிரதேசத்தில் யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு தமிழ் பெண் இராணுவத்தினரைப் பார்த்து “ஐயா எங்களை காப்பாற்றுங்கள், எல்.ரி.ரி.ஈ எங்களை கொலை செய்யப் பார்க்கிறார்கள்” என்று கதறி அழுதார். அந்த கதறல் முடிவடைதற்கு முதல் எல்.ரி.ரி.ஈ. யினர் அங்குள்ள பலரை சுட்டுக் கொன்றனர் என்று ஜனாதிபதி கூறினார்.
யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக தங்கள் காலத்தை கடத்தி வந்தார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினம் மாத்திரம் தான் வன்னியில் மற்ற அப்பாவி மக்களுடன் தங்கியிருந்து வேதனையை அனுபவித்து வந்தார் என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கனகரெத்தினம் அரசாங்கத் தரப்பிற்கு உயிர்தப்பி ஓடி வந்து கொண்டி ருந்த 600 பொதுமக்களை எல்.ரி.ரி.ஈ. யினர் முதுகுப் புறத்தில் சுட்டு படுகொலை செய்ததை தாம் நேரில் கண்டதாக கூறியிருக்கிறார். இவை பற்றியெல்லாம் தருஸ்மன் அறிக்கையில் ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்று சொன்னார்.
ஞாயிறு ஆங்கில பத்திரிகையின் ஆசி ரியர் ஒருவர் ஒசாமா பின்லேடனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிaர்கள் என்று கேட்டதற்கு, அவர் இறந்துவிட்டார். அதை விட என்னால் கூறுவதற்கு ஒன்று மில்லை என்று ஜனாதிபதி பதிலளித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரி விக்கையில், தருஸ்மன் அறிக்கையில் ஒருவிடயத்தை நான் வரவேற்கிறேன் என்றார். இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாதிருக்கிறதென்ற பகுதியை நான் வரவேற்கிறேன் என்று சொன்னார். தருஸ்மன் அறிக்கையைப் போல் ஆதார மற்ற, ஒருதலைப்பட்சமான ஒரு அறிக்கை யாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமையக் கூடாது என்பதனால் அதனை அவசரப்படாமல் நல்ல முறையில் தயாரிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் அக்கறை காட்டி வருகிறதென்று ஜனாதிபதி கூறினார்.
ஊடகவியலாளர்களுக்கு தீங்கிழைக்கும் போது அவற்றை விசாரித்து, குற்றம் இழைத்தவர்களை உங்கள் அரசாங்கம் தண்டிப்பதில் கவனம் செலுத்தாமல் இருக்கிறது என்று ஒரு ஊடகவியலாளர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதி பதி, சமீபத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய பொலிசாருக்கு எதிராக நாம் ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுத்துள் ளோம் என்று சொன்னார்.
அது போன்றே, மற்ற ஊடகவியலாளர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பை அளித்தால் அவர்களுக்கு குற்றம் இழைத்தவர்களை நாம் நிச்சயம் கண்டிக்க தவறமாட்டோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, கீத் நொயார், உபாலி தென்னக்கோன் ஆகிய ஊடகவியலாளர்கள் பொலிஸ் விசாரணை களுக்கு ஒத்துழைத்தால் சம்பந்தப்பட்ட வர்களை அரசாங்கம் பொலிஸ் விசாரணைகள் மூலம் தண்டிக்க முடியுமென்று தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்கள், வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் ஆகியவர்களுக்கான மூன்று ஓய்வூதியத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த உள்ளது என்றும் இதனால், வயோதிப காலத்தில் அரசாங்க ஊழியர்கள் பெறுவது போன்று ஓய்வூதியத் தைப் பெற்று மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான வழி ஏற்படுமென்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியினரும், ஜே.வி.பி யினரும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியை சூறையாடுவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சதியே இந்த தனியார் துறை ஓய்வூதியத்திட்டமென்று அரசியல் இலாபத்திற்காக போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது உண்மையிலேயே மன வேதனை அளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கென புறம்பான ஊழியர் சேமலாப நிதியங்களை வைத்து, அந்தப் பணத்தை கம்பனியின் வேறு தேவைகளுக்கு செலவிடும் எத்தனையோ ஊழல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தருஸ்மன் அறிக்கை வெளிவந்தவுடன் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதி இறங்கி மற்ற நாடுகளில் ஏற்பட்டது போன்ற கிளர்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தவர்களை அரசாங்கத்திற்கு இருக்கும் மக்கள் ஆதரவு ஏமாற்றமடையச் செய்திருக்கிறது என்று தெரிவித்த ஜனாதி பதி அவர்கள், இலங்கையின் எதிர்க்கட்சி வலுவிழந்து மக்களால் ஓரங்கட்டப்பட்டுள்ள ஒரே காரணத்தினால் தான் வெளிநாட்டு சக்திகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இத்தகைய சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நோர்வேயிலுள்ள அரச சார்பற்ற அமைப்பொன்று தமக்கும், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: