ராமநாதபுரம்: அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது நாக்கை அறுத்து சாமிக்கு காணிக்கையாக்கியுள்ளார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரிதா என்ற பெண்மணி.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்தவர் சரிதா (28). தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என, வீரபாண்டி கவுமாரியம்மனிடம் வேண்டிக் கொண்டாராம். தனது வேண்டுதல் நிறைவேறினால் , தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டராம்.இந்த நிலையில், வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழாவிற்கு வந்த சரிதா, சாமி கும்பிடச் சென்ற போது, தனது நாக்கை வெட்டி சாமிக்கு காணிக்கையாக்கியுள்ளார்.
அப்போது, அரவது வாயில் இருந்து ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், அவரை திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.பின்பு, திமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சரிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பல கழக கண்மணிகள் தங்கள் தங்கள் அவயவங்களை ஜெயா அம்மாவுக்கு நேர்த்தி காணிக்கையாக்கும் காட்டுமிராண்டித்தனங்கள் இனி அதிக அளவில் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மண்சோறு உண்ணல் அங்கப்பிரதட்சணம் செய்தல் அழகு குத்தல் காவடி எடுத்தல் காலில் விழுந்தது விழுந்தது வணங்குதல் போன்ற அடிமைத்தன கண்றாவிகளை எல்லாம் உலகம் இனி கண்டு கழிக்க வேண்டி இருக்கிறது.
தமிழனின் அடிமைத்தனம் கண்கொள்ளாக்காட்சியாக மேடை ஏறப்போகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக